அட கொடுமையே.. காதல் தோல்வியில் ஷிவானி பாடும் பாட்ட பாருங்க.. வைரலாகும் அன்சீன் புரமோ!
சென்னை: காதல் தோல்வியில் பிக்பாஸ் வீட்டில் கூட்டாக ஷிவானி சோக பாடல்களை பாடும் அன் சீன் புரமோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 4ன் அன் சீன் காட்சிகள் விஜய் மியூஸிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
அதற்கான அன்சீன் புரமோக்களும் விஜய் சூப்பர் சேனலின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சோகப் பாடல்கள்
அந்த வகையில் இன்றைய அன்சீன் புரமோ வெளியாகியுள்ளது. அதில் ஷிவானி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா ஆகிய மூன்று பேரும் கார்டன் ஏரியாவில் மழையில் நனைந்தப்படி ஒரே சோகப் பாடல்களை பாடி வருகின்றனர்.

கம்பெனி கொடுக்கும் ரம்யா
முதல் பாடலாக ஊர தெரஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் பாடலை மூன்று பேரும் கோரஸாக பாடுகின்றனர். அப்போது ஷிவானியிடம் ஸிச்சுவேஷன் சாங், உங்களோட சேர்ந்துக்குறோம் என கூறி கம்பெனி கொடுக்கிறார் ரம்யா பாண்டியன்.

ஒய் திஸ் கொலவெறி
அதன் பிறகு மூன்று பேரும் சேர்ந்து ஒய் திஸ் கொலவெறி கொல வெறி பாடலை பாடுகின்றனர். அப்போது எல்லோரும் கொல வெறி டி என கூற, ஷிவானி மட்டும் டா என்கிறார். அப்போது ரம்யாவிடம் என்ன டா என்றும் பாவமாய் கேட்கிறார் ஷிவானி.

நண்பன் போதும்டா
அதனை தொடர்ந்து கண்ண கலங்க வைக்கும் பையங்க வேணாம்டா.. கண்ணீர் அஞ்சலி போஸ்ட்ர் ஒட்டும் நண்பன் போதும்டா என்று பாடி மூன்று பேரும் ஒன்றாய் கட்டிப்பிடித்து கொள்கின்றனர்.

கடைசியில் காதலிக்கவில்லை
இத்தனை நாட்கள், ஊட்டி விடுவது, மசாஜ் செய்வது, தடவுவது மடியில் படுப்பது என இருந்து வந்த பாலாஜி இன்று ஷிவானியை காதலிக்கவில்லை என்று கூறிவிட்டார். இதனால் ஷிவானி ஷாக்கானதாக காட்டப்பட்டது.

அன்சீனில் சோகம்
இந்நிலையில் ஷிவானி காதல் தோல்வியில் சோகப் பாடல்களை பாடி வருவது பிக்பாஸ் அன்சீன் புரமோவில் காட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் வீட்டுக்குள் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











