அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!

சென்னை: அம்மாவ பத்தி ஏன் பேசின என்றும் என்னைப் பத்தி தப்பா எப்படி பேசுவன்னும் பாலாவை வச்சு விளாசி விட்டார் ஷிவானி நாராயணன்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் வரை பாலா பற்றி தெரியாமல், இருந்த ஷிவானி வெளியே சென்று திரும்பிய நிலையில், பாலாவை மொத்தமாக புரிந்து வைத்துக் கொண்டார் என்றே தெரிகிறது.

புறம் பேசும் பாலாவை சும்மா கேள்விகளால் ஷிவானி நாராயணன் கிழித்துத் தொங்கவிட்டதை பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டைட்டிலுக்காக

டைட்டிலுக்காக

பாலாஜி முருகதாஸ் இந்த வாரம் முழுக்கவே அப்படியே அமைதியான நல்ல புள்ளை மாதிரியே நடந்து வருகிறார். இத்தனை வாரங்களாக அதிரடி காட்டிய பாலாஜி இந்த முறை ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறார் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியிலே எழுந்துள்ளது. எல்லாம் டைட்டிலுக்காகத் தான் இந்த வேஷம் என்று நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

ஆரியாக மாறிய பாலா

ஆரியாக மாறிய பாலா

பிக் பாஸ் வீட்டில் யாரும் பேசாமல் தன்னை ஒதுக்குகிறார்கள் என தெரிந்து கொண்ட ஆரி, கேமராவை பார்த்து பேசி வெளியே ரசிகர்களை சம்பாதித்தார். ஆனால், உள்ளே தனது துணிச்சலான கேமை எதற்கும், யாருக்கும் பயப்படாமல் விளையாடிய பாலா, கடைசி நேரத்தில் ஆரி போல மாற வேண்டும் என நினைத்து கேமரா முன் நின்று பேசுவது காமெடியாகத்தான் இருக்கு..

வித்தியாசமான என்ட்ரி

வித்தியாசமான என்ட்ரி

வெள்ளிக்கிழமை பிக் பாஸ் எபிசோடில் வித்தியாசமான என்ட்ரியாக ஷிவானி நாராயணனை படுக்கிற பாய்க்குள் சுருட்டி வைத்து அனுப்பினர். ஸ்டோர் ரூமில் சாப்பாடு வந்திருப்பதை பார்த்த சுசித்ரா, பாய்க்குள் ஷிவானி இருப்பதை பார்த்து பயந்து அலறிவிட்டார். ஷிவானியை மீண்டும் பார்த்த ஹவுஸ்மேட்கள் அவரை வரவேற்றனர்.

துடித்து எழுந்த பாலா

துடித்து எழுந்த பாலா

அனிதா, சனம் என யார் வந்த போதும் படுத்த இடத்தில் இருந்து எழுந்திரிக்காமல் இருந்த பாலாஜி முருகதாஸ், சுரேஷ் தாத்தா தான் வந்துருக்காரு போல என நினைத்து படுத்துக் கொண்டே யார் வந்துருக்கா என அசால்ட்டாக கேட்க, ஷிவானி என்றதும், துடித்து எழுந்து ஓடோடி வந்து ஷிவானி முன் நின்றார் பாலா.

பாலாவின் சுயரூபம்

பாலாவின் சுயரூபம்

வெளியே போன ஷிவானிக்கு பாலாவின் சுயரூபம் நல்லாவே தெரிந்து விட்டது. கொஞ்சம் கூட பாலாவை மதிக்காமல், அவரை அவாய்டு பண்ணது தெளிவாக தெரிந்தது. ஆனால், ஷிவானியை பின் தொடர்ந்து அவரிடம் பேச வேண்டும் என பாலா முயற்சித்ததை பார்த்த ஷிவானி, பாலா பண்ணிய காரியத்தை அவர் முன்பே கேட்டு விட்டார்.

அம்மாவ பத்தி ஏன் பேசின

அம்மாவ பத்தி ஏன் பேசின

பாலா உன் கூடத்தான நல்லா பேசிட்டு இருந்தேன்.. என்னப் பத்தியும் எங்க அம்மாவ பத்தி ஏன் அப்படியெல்லாம் நீ பேசின என ஷிவானி நாக்கை பிடுங்குவதை போல பாலாவிடம் கேட்க, ஒன்றுமே தெரியாத அப்பாவி போல பாலா நடித்ததை ஷிவானியே நம்பவில்லை.

உங்க அம்மா பண்ணது தப்பு

உங்க அம்மா பண்ணது தப்பு

ஷிவானி அப்படி கேட்ட உடனே மீண்டும் முந்திரிக்கொட்டை போல உங்க அம்மா பண்ணது தப்புன்னு சொன்னேன்.. உன் கிட்ட அவங்க அப்படி பேசியிருக்கக் கூடாதுன்னு தான் சொன்னேன், உன்னை தப்பா எங்கேயும் பேசல என மீண்டும் ஷிவானியின் அம்மாவை பற்றி பேசி வசமாக மாட்டிக் கொண்டார் பாலாஜி முருகதாஸ்.

ஸ்கூல் பொண்ணு இல்லை

ஸ்கூல் பொண்ணு இல்லை

ஆஜீத் கிட்ட ஸ்கூல்ல படிக்கிற பொண்ண எல்லாம் உள்ளே ஏன் விட்டாங்கன்னு எப்படி சொல்லுவ, நான் ஒண்ணும் ஸ்கூல் படிக்கிற பொண்ணு இல்லை.. 18 வயசுக்கு மேல ஆன பிக் பாஸ்க்கு வர தகுதி இருக்கு, ஆஜீத்தோட நான் பெரியவ என ஷிவானி பாலாவை டோட்டல் டேமேஜ் செய்து விட்டு சென்றுள்ளார்.

Recommended Video

Interviewer பேசுற பேச்சா இது? Chinmayi about Viral Girl - Filmibeat Tamil
உண்மையாவே இல்லை

உண்மையாவே இல்லை

பாலாஜி முருகதாஸ் ஷிவானி மற்றும் ஆஜீத்துக்கு கூட உண்மையாக இல்லை என்பதை வெளியே போயிட்டு உள்ளே வந்த இருவரும் நல்லாவே உணர்ந்து கொண்டனர். இதுக்கு மேலும் ரசிகர்கள் பாலாவுக்கு ஓட்டுப் போட்டு டைட்டில் வின்னர் ஆக்கினால், அதை விட டிரெண்ட் செட்டிங் வேற எதுவுமே இருக்க முடியாது என பிக் பாஸ் ரசிகர்கள் பாலாவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X