நீ என்ன போடுறது.. நான் என்ன மாட்றது.. போட்ட வேகத்தில் போர்டை கழட்டிய ஷிவானி.. கண்டித்த பிக்பாஸ்!
சென்னை: அர்ச்சனா மாட்டிய வேகத்தில் கழுத்தில் இருந்த போர்டை ஷிவானி கழட்டியதை பிக்பாஸ் கண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பங்கேற்றுள்ளார் அர்ச்சனா.
வந்ததுமே, ஒருவரையும் விடாமல் எல்லோரையும் பயங்கரமாக கலாய்த்து தள்ளினார்.

ஆர்வமான ஹவுஸ்மேட்ஸ்
ஹவுஸ்மேட்ஸ்கள் எல்லோருமே தங்களை பற்றி வெளியே என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய ரொம்பவே ஆர்வமாக இருந்தனர். அனிதா, சனம் ஷெட்டி போன்ற போட்டியாளர்கள் வாயை விட்டு கேட்டு விட்டனர்.

அதிருப்தி
எல்லோருக்குமே இன்னும் கொஞ்ச நேரத்தில் சொல்கிறேன் என பட்டும் படாமல் பதில் சொன்னார் அர்ச்சனா. தான் பொடி வைத்து பேசியதை போலவே, கொஞ்ச நேரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டத்தை கொடுத்து அவர்களை அதிருப்தியடைய செய்தார்.

கேபி கோபம்
அவர் கொடுத்த பட்டங்களை பெறும் போதே பல போட்டியாளர்களின் முகத்தில் ஈயாடவில்லை. பலரும் வேண்டா வெறுப்புடன் அதை கழுத்தில் மாட்டிக் கொண்டனர். கேப்ரியல்லா மாட்டும் போதே நானே போட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஷிவானியை சீண்டிய அர்ச்சனா
அதற்கு இப்போதே கோபம் வருகிறதே என்று கூறியப்படி தனது வேலையை தொடர்ந்தார் அர்ச்சனா. ஷிவானியை அழைத்து அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட் என்ற பட்டத்தை கொடுத்தார் அர்ச்சனா. அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட் என்றால் என்ன தெரியுமா என்று கேட்டு விளக்கமும் கொடுத்தார்.

கண்டுக்காத ஷிவானி
ஆனால் போய் உட்காந்த வேகத்தில் நீ என்ன போடுறது.. நான் என்ன மாட்றது என அதனை கழட்டி கையில் வைத்து கொண்டார் ஷிவானி. நீங்க இப்படி இருக்கக்கூடாது அப்படிங்றதுக்காகதான் இதை உங்களுக்கு கொடுக்கிறேன் என விளக்கம் கொடுத்தார் அர்ச்சனா.

கண்டித்த பிக்பாஸ்
ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தார் ஷிவானி. உடனே பிக்பாஸ், ஷிவானி அந்த போர்டை கழுத்தில் மாட்டுங்கள் என்று கண்டித்தார். இதனால் ஷிவானியின் முகமே மாறியது. இருந்தபோதும் தலையெழுத்தே என போர்டை மாட்டிக்கொண்டார் ஷிவானி.


Click it and Unblock the Notifications











