»   »  ரஜினி, கமலுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்திப்பு.. மகள் திருமணத்துக்கு அழைப்பு

ரஜினி, கமலுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்திப்பு.. மகள் திருமணத்துக்கு அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சென்னையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாஸனைச் சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன்களில் ஒருவர் சிவராஜ்குமார். இவரும் கன்னடத்தில் பிரபல நடிகர்.

இவரது மூத்த மகள் நிருபமாவுக்கும் திலீப்புக்கும் ஆகஸ்ட் 31-ம் தேதி பெங்களூரில் திருமணம் நடக்கிறது.

ரஜினி

ரஜினி

இந்தத் திருமணத்துக்கு அழைப்பிதழ் தர, மனைவி கீதாவுடன் நேற்று முன் தினம் சென்னை வந்தார் சிவராஜ்குமார். போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டுக்குச் சென்று அவருக்கு முதல் அழைப்பிதழ் வைத்தார்.

கமலுக்கும்

கமலுக்கும்

தொடர்ந்து கமல் ஹாஸன், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், நாசர், பிரகாஷ் ராஜ், அதர்வா ஆகியோருக்கும் அழைப்பிதழ் தந்தார்.

முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

திமுக பொருளாளர் முக ஸ்டாலினையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார் சிவராஜ்குமார்.

சிவாஜி குடும்பத்துக்கு

சிவாஜி குடும்பத்துக்கு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்குச் சென்ற சிவராஜ்குமார், அங்கு பிரபு, ராம்குமார் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் தந்தார்.

English summary
Shivaraj Kumar and his wife Geetha visited several Tamil actors and politicians including Rajinikanth at their residences to invite them to the wedding of his daughter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos