தெலுங்கைத் தொடர்ந்து, கன்னடத்திலும் ரீமேக் ஆகிறது அசுரன்! தனுஷ் கேரக்டரில் இவர்தான் நடிக்க போறாராம்!
சென்னை: தமிழில் ஹிட்டான அசுரன் படம் தமிழைத் தொடர்ந்து கன்னடத்திலும் ரீமேக் ஆகிறது.
Recommended Video
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய படம், அசுரன். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.
இதில் ஹீரோவாக நடித்திருந்த தனுஷ் வயதான கேரக்டரிலும் இளவயது தோற்றத்திலும் நடிப்பில் மிரட்டியிருந்தார்.

வெக்கை நாவல்
அவர் மனைவியாக, மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். தமிழில் அவருக்க் இதுதான் முதல் படம். மற்றும் டீஜே, கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, பவன், ஏ.வெங்கடேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம், பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்தது. அண்ணனை கொன்றவனை தம்பி பழிதீர்க்க, அதற்குப் பிறகு நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை.

100 கோடி வசூல்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது. நடிகர் தனுஷுக்கு முதல் முறையாக, 100 கோடி வசூலை ஈட்டித் தந்த படம், இதுதான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெகா ஹிட்டான தமிழ் படம் இது. இந்தப் படம் 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர். இதன் நூறாவது நாள் விழா சென்னையில் நடந்தது.

தெலுங்கில் நாரப்பா
பல வருடங்களுக்குப் பிறகு நூறாவது நாள் கொண்டாடிய திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், தனுஷ், வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்தப் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். ஶ்ரீகாந்த் அட்டலா இயக்கும் இதில் மஞ்சுவாரியர் கேரக்டரில் பிரியாமணி நடிக்கிறார். தாணுவுடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது.

சிவராஜ்குமார்
இந்நிலையில், இந்தப் படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜேக்கப் வர்கீஸ் இயக்குகிறார். கடந்த 19 வருடங்களாக ரீமேக் படங்களில் நடிக்காமல் இருந்த சிவராஜ்குமார், இப்போது ரீமேக் படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் வெளியான, ஒப்பம், தமிழில் வெளியான 'சாட்டை' பட ரீமேக்குகளில் நடித்தார். அடுத்து கைதி ரீமேக்கில் நடிக்கிறார். இப்போது அசுரன் ரீமேக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications