திரும்பவுமா? 'கைதி' ரீமேக்கில் நடிக்கும் ஹீரோ மீது ரசிகர்கள் அதிருப்தி... சபதத்தை முறிச்சிட்டாரே?

By

சென்னை: 'கைதி' படத்தில் ரீமேக்கில் நடிக்கும் ஹீரோ மீது ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

கார்த்தி, நரேன், தீனா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்த படம், கைதி.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.பிரகாஷ்பாபு தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ்.இசை அமைத்திருந்தார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தமிழில் ஹிட்

தமிழில் ஹிட்

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்தப் படம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆனது. தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம், தெலுங்கில் டப் செய்தும் வெளியிடப்பட்டது. அங்கும் ஹிட்டானது. கதாநாயகி இல்லாமல் உருவான இந்தப் படத்தின் வெற்றி, திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

இந்நிலையில் இதன் இந்தி ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் கைதி படத்தை தயாரிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இது உறுதி செய்யப்பட்டது. இதன் ரீமேக் ஹிர்த்திக் ரோஷன் நடிப்பதாக கூறப்பட்டது.

கன்னட ரீமேக்

கன்னட ரீமேக்

இந்நிலையில், நடிகர் அஜய்தேவ்கன், கைதி ரீமேக்கில் நடிப்பதை உறுதி செய்தார். இதுபற்றி ட்விட்டரில் அவர் தெரிவித்திருந்தார். இதன் ஷூட்டிங்கை ஜூன் மாதம் தொடங்க திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் இதன் கன்னட ரீமேக்கில் சிவராஜ்குமார் நடிக்கிறார். கன்னட சினிமாவில் பெரும்பாலும் ரீமேக் படங்கள்தான் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அந்த நிலை மாறி வருகிறது.

வெற்றி பெறவில்லை

வெற்றி பெறவில்லை

இந்நிலையில் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்ற சபதத்தோடு இருந்தார் சிவராஜ்குமார். கடந்த 14 வருடங்களாக கடைபிடித்த அந்த சபதத்தை முறித்துக்கொண்டு, இப்போது ரீமேக் படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் வெளியான, ஒப்பம் படத்தின் ரீமேக்கான 'கவாச்சா'வில் சமீபத்தில் நடித்தார். பிறகு தமிழில் வெளியான 'சாட்டை' ரீமேக்கில் நடித்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

இந்நிலையில், கைதி ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இதை நந்தகிஷோர் இயக்குகிறார். கன்னட சினிமாவில் மற்ற ஹீரோக்கள் இந்தி, தெலுங்கு, தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் உருவாகும் படங்களை எடுத்து ஹிட் பண்ணும்போது இவர், இப்படி, ரீமேக் படங்களில் நடிப்பது பற்றி அவரது ரசிகர்கள் சகேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X