பேக்கு, பன்னி, சாக்கு: இனியாவுக்கு கன்னடம் கற்றுக் கொடுக்கும் சூப்பர் ஸ்டார்

By Siva

பெங்களூர்: நடிகை இனியா கன்னட படத்தில் நடிப்பதால் கன்னடம் கற்றுக் கொண்டிருக்கிறாராம்.

வாகை சூடவா படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் இனியா. நல்ல அழகும், நடிப்புத் திறமையும் உள்ளவர். இருப்பினும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.

Shivarajkumar turns Kannada teacher for Iniya

எனினும் அவர் மனம் தளராமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார். இனியா தற்போது சிவராஜ்குமார் ஜோடியாக த்ரோனா என்கிற கன்னட படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவர் பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார்.

செட்டில் சிவராஜ்குமார் இனியாவுக்கு கன்னடம் கற்றுக் கொடுக்கிறாராம். ஒரு சூப்பர் ஸ்டார் இனியாவுக்கு கன்னடம் கற்றுக் கொடுப்பதை பார்த்து செட்டில் உள்ளவர் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

சிவராஜ்குமார் இனியாவுக்கு மொழியை மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை. கன்னட வரலாறு, கலாச்சாரம் பற்றியும் விளக்கி வருகிறாராம். ஒரு பெரிய ஸ்டார் தனக்கு பல வேலைகள் இருந்தும் இப்படி பொறுமையாக ஒரு நடிகைக்கு உதவுவதை பார்த்து அவரின் ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X