கால்ஷீட் பிரச்சனை.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம்.. விக்ரமுக்கு நோ சொன்ன பிரபல ஹீரோ!

By

சென்னை: கால்ஷீட் பிரச்சனை காரணமாக, விக்ரம் படத்தில் நடிக்கவில்லை என்று பிரபல ஹீரோ தெரிவித்துள்ளார்.

இப்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இது அவரது 58 வது படம். அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

இவர், அருள்நிதி நடித்த டிமான்டி காலனி, நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் படங்களை இயக்கியவர்.

பலவித கெட்டப்

பலவித கெட்டப்

ஹீரோயினாக 'கே.ஜி.எஃப்' ஸ்ரீனிதி ஷெட்டி நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார்.

கேங்ஸ்டர் படம்

கேங்ஸ்டர் படம்

இந்தப் படத்தை அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதையும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். இது ஜெமினி, பீமா படங்களைப் போல கேங்ஸ்டர் படம் என்று கூறப்படுகிறது.

சிவராஜ்குமார்

சிவராஜ்குமார்

இந்தப் படத்தில் கன்னட ஹீரோ சிவராஜ்குமாரை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கக் கேட்டிருந்தனர். அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்து இருந்தார். இதற்காக அவர் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால், இப்போது அவர் இந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளார்.

அதிகமான நாட்கள்

அதிகமான நாட்கள்

இதுபற்றி, சிவராஜ்குமார் கூறும்போது, சில படங்களில் நான் ஏற்கனவே கமிட் ஆகி இருந்தேன். அதிகமான நாட்கள் கால்ஷீட் தேவையாக இருந்ததால், கார்த்திக் படத்தில் என்னால் நடிக்க இயலவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து வேறு முன்னணி நடிகரை படக்குழு தேடி வருகிறது.

ஜேம்ஸ் காஸ்மோ

ஜேம்ஸ் காஸ்மோ

தற்போது தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கி உள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடித்திருக்கிறார். மற்றும் கலையரசன், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X