Don't Miss!
- News
வெறுப்பு பேச்சு வழக்கு.. எவ்வளவு உத்தரவு போட்டாலும் பின்பற்றுவதில்லை.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை
- Automobiles
இன்னோவாலாம் இனி வேஸ்ட் இனிமே இந்த கார்தான் பெஸ்ட்னு நினைச்சுட்டாங்க போல! புக்கிங் கண்ட மேனிக்கு குவியுது
- Technology
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஷிவினோட மனசை உடைச்ச கதிரோட கேர்ள் ஃபிரெண்ட்.. பாட்டு பாடி பாத்ரூமுக்கு ஓட வச்ச அமுதவாணன்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் அசல் கோலார் போன பிறகு ரச்சிதாவுக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் இடையே ஒரு லவ் டிராக் ஓட்டினார்கள். ராபர்ட் மாஸ்டரும் வெளியேறிய பின்னர் கதிர் மற்றும் ஷிவின் லவ் டிராக்கை உருட்டி வந்த நிலையில், அதற்கு வேட்டு வைத்து விட்டார் கதிரோட கேர்ள் ஃபிரெண்ட் சினேகா ரவி.
கதிருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அவரது காதலி உள்ளே வந்து கட்டிப் பிடித்து கொஞ்சியதை பார்த்ததுமே ஷிவின் செம அப்செட் ஆகி விட்டார்.
ஷிவினை மேலும் காயப்படுத்த நினைத்த அமுதவாணன் பாட்டுப் பாட அழுது கொண்டே பாத்ரூமுக்கு ஷிவின் ஓடும் 3வது ப்ரமோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்... கூடவே ஒரு ரூல்ஸும் போட்டாங்க பாருங்க...

லவ் டிராக்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் செம லவ் டிராக் ஓடும். அதன் பின்னர் வெளியே போன பிறகு அந்த பையன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதும், அந்த பெண் வேறு ஒரு பையனை திருமணம் செய்து கொள்வதும் வழக்கமாகி வருகின்றன. இந்நிலையில், இந்த சீசனிலும் கடைசி நேரத்தில் அப்படியொரு லவ் டிராக்கை கஷ்டப்பட்டு தேடிப் பிடித்து உருட்டி வந்த நிலையில், அதுவும் உடைந்து விட்டது.

கதிர் ஷிவின் காதல்
கதிரை மருமகனாகவே மாற்றியிருந்தார் ராபர்ட் மாஸ்டர். குயின்ஸி ஷிவினை வெறுப்பேற்றவே நானும் கதிரும் காதலர்கள் போல பிராங்க் செய்தோம். ஷிவின் தான் கதிரை ரொம்பவே காதலிக்கிறார் என வெளியே வந்த நிலையில், பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். இந்நிலையில், கதிரின் காதலி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து ஷிவினின் இதயத்தை சுக்குநூறாக நொறுக்கி விட்டார்.

சினேகா ரவி
சோஷியல் மீடியா சென்சேஷன் சினேகா ரவி தான் கதிரின் காதலி என தெரிந்ததும் ஏகப்பட்ட இளைஞர்களே இதயம் நொறுங்கி போய் இதயம் முரளி போல ஆகி உள்ளனர். அதே போல பிக் பாஸ் வீட்டுக்குள் ஷிவினின் நிலைமையும் படு மோசமாக மாறி விட்டது. சினேகா ரவி சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து கதிரை கொஞ்சியதை பார்த்த சக ஹவுஸ்மேட்ஸ் ஷிவினை மரண ட்ரோல் செய்து வருகின்றனர். ப்ரமோக்களும் ஷிவினை சுற்றியே வலம் வருகின்றன.

நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் ஷிவினின் வயிற்றெரிச்சலை கொட்டி வரும் நிலையில், மேலும், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல அமுதவாணன் படுத்துக் கொண்டு "நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா புரியுமா" என பாடி ஷிவினை தேம்பி தேம்பி அழ வைத்து விட்டார்.

ஷிவின் அழுகை
கதிர் மற்றும் அவரது காதலியின் ரொமான்ஸை பார்த்து பொசஸிவாக ஆன ஷிவின் படுக்கையிலேயே கதறி கதறி அழ ஆரம்பித்து விட்டார். ஷிவின் ஏன் அழற என சக போட்டியாளர்கள் கேட்க, அங்கே இருந்து நகர்ந்து செல்லும் காட்சிகள் 3வது ப்ரமோவில் இடம்பிடித்துள்ளன.

பாத்ரூமுக்குள் ஓடி
மற்ற போட்டியாளர்கள் தான் அழுவதை பார்த்து விடக் கூடாது என நினைத்த ஷிவின் அங்கே இருந்து பாத்ரூமுக்குள் ஓடி அழும் காட்சிகளையும் சோக ரொமான்டிக் பாடலுடன் சேர்த்து பிக் பாஸ் எடிட்டரும் போட்டு டிஆர்பியை எகிற வைத்துள்ளார்.

சிம்பதி ஓட்டுக்கள்
ஷிவினை எப்படியாவது டைட்டில் வின்னர் ஆக்க வேண்டும் என்பதற்காக இப்படி சிம்பதி ஓட்டுக்களை சேகரிக்க லவ் டிராக் பயன்படுத்துறாங்களா என பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஷிவின் அழாத உனக்குன்னு ஒருத்தர் கிடைப்பார் என அவரது ரசிகர்கள் ஆறுதல் வார்த்தைகளையும் கமெண்ட்டுகளாக போட்டு வருகின்றனர்.