பிக் பாஸ் சீசன் 6.. 3வது போட்டியாளாராக உள்ளே நுழைந்தார் ஷிவின் கணேசன்.. இனி ஓடி ஒளிய மாட்டேன்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 6ல் மூன்றாவது போட்டியாளராக திருநங்கை ஷிவின் கணேசன் நுழைந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் இன்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பதை கமல்ஹாசன் ஒருவர் ஒருவராக அறிமுகப்படுத்தி வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் சீசன் 6ல் தங்களுக்குள் அறிமுகம் இல்லாத போட்டியாளர்கள் எவ்வித வெளியுலக தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டில் 100 நாட்கள் தங்கும்போது அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களே பிக்பாஸ் நிகழ்ச்சி. அன்பு,பாசம், காதல், சண்டை என பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் அனைத்தையும் சமாளித்து டைட்டிலை வெல்லவேண்டும்.

ஷிவின் கணேசன்

ஷிவின் கணேசன்

இன்று தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 3வது போட்டியாளராக திருநங்கையாக ஷிவின் கணேசன் நுழைந்தார். தன்னை அறிமுகப்படுத்திய ஷிவின், பிறந்து வளர்ந்தது எல்லாம் கரைக்குடிபக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் தான். நான் 6வது படிக்கும் போதே அப்பா இறந்து விட்டதால், அம்மாவுடன் வளர்ந்தேன். நான் இங்கே படித்தால் சரியாக வராது என்பதை என் அம்மா புரிந்து கொண்டு என்னை சிங்கப்பூரில் படிக்க வைத்தார்கள். அங்கே ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்தேன்.

இனி ஓடிய ஒளிய மாட்டேன்

இனி ஓடிய ஒளிய மாட்டேன்

இருந்தாலும் என் ஆசை இந்தியா வரவேண்டும் இங்கு திருநங்கை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஒரு நடிகையா, ஒரு மாடலா என்னை நான் விரிவுப்படுத்திக் கொள்ள பிக் பாஸ் ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு கொடுத்துள்ளது. இனி ஓடிய ஒளிய மாட்டேன் என்றார் ஷிவின் கணேசன்.

வெளியேறினார்

வெளியேறினார்

கடந்த பிக் பாஸ்சீசன் 5ல் திருநங்கை நமீதா மாரிமுத்து கலந்து கொண்டார். கடந்து வந்த பாதையில் அவர் பேசியதை கேட்டு அனைவரும் கண் கலங்கி அவருக்கு ஆதரவு பெருகிய நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் ஏன் வெளியேறினார் என்ற தகவலை பிக் அறிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X