கை, கால் நல்லாத் தானே இருக்கு: சூர்யா ஹீரோயினை விளாசிய பிரபல ஹீரோ
Recommended Video

மைசூர்: நடிகை விஜயலட்சுமிக்கு கையும், காலும் நன்றாக தானே இருக்கிறது என்று கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் விளாசியுள்ளார்.
விஜய், சூர்யா நடித்த ஃபிரெண்ட்ஸ் படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமான நடிகை விஜயலட்சுமி உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்கு பணம் இல்லை என்று கூறி திரையுலகினரிடம் உதவி கேட்டார்.

விஜயலட்சுமி
சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோர் எனக்கு உதவி செய்யவில்லை என்று கூறி விஜயலட்சுமி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது குறித்து மைசூருக்கு வந்த சிவராஜ்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

உண்மை
விஜயலட்சுமிக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருக்க முடியாது. அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார். அவர் விரும்புவதை அவர் செய்வார். ஆனால் ஒருவர் சொல்வது எல்லாம் உண்மையா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிவராஜ்குமார்.

கடின உழைப்பு
உடலில் குறையுள்ளவர்கள் கடினமாக உழைத்து வாழ்கிறார்கள். அப்படி இருக்கும்போது நல்ல கை, கால்கள், மனநலம் இருப்பவரால் ஏன் தன்னை பார்த்துக்கொள்ள முடியவில்லை. முடியாத ஒருவரை பார்த்தால் உதவி செய்ய வேண்டும் என்று தோன்றும். அந்த உணர்வு உள்ளிருந்து வர வேண்டும் என்று சிவராஜ்குமார் கூறியுள்ளார்.

ரசிகர்கள்
மருத்துவமனையில் இருக்கிறேன் என்று கூறும் விஜயலட்சுமி எப்பொழுது பார்த்தாலும் சமூக வலைதளங்களில் எப்படி போஸ்ட் போடுகிறார்?. அவருக்கு நிஜமாகவே உடல்நலம் சரியில்லையா என்று மக்கள் கேள்வி எழுப்பிய நிலையில் சிவராஜ்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











