ட்விட்டரில் இணைந்த ஷோபா சந்திரசேகர்… ஆரம்பமே தளபதியுடன் இருக்கும் வெறித்தனமான பதிவு..!
சென்னை : நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் முதன்முறையாக ட்விட்டரில் இணைந்துள்ளார்.
ஆரம்பத்திலே வெறித்தனமான பதிவை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார் ஷோபா சந்திரசேகர்.
ட்விட்டரில் இவர் இணைந்துள்ளதுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஷோபா சந்திரசேகர்
நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர், பாடகி, எழுத்தாளர் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவர். ஒளி இசைக் குழுவில் பாடகியாக இருந்த ஷோபா, இருமலர்கள் எனும் திரைப்படத்தில் மகாராஜா ஒரு மகாராணி என்ற பாடலை பாடினார். பின்னர் படங்களில் பாடுவதில் பட்டமும் பெற்றார்.

எழுத்தாளர்
தனது கணவர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய பெரும்பான்மையான திரைப்படங்களில் இவர் பின்னணிப் பாடகராக பணிபுரிந்துள்ளார். விஜய் நடித்த சுறா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நான் நடந்தால் அதிரடி பாடலை நவீன் மற்றும் ஜனனியுடன் இணைந்து பாடியுள்ளார். தனது கணவர் எஸ்.ஏ.சந்திரசேகரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட பல கதைகளை அவர் எழுதியுள்ளார் . அவர் திரைப்பட தயாரிப்பாளராக மாறி பின்னர் திரைப்பட இயக்குனராகவும் மாறினார்.

ட்விட்டரில் இணைந்த ஷோபா
இந்நிலையில், ஷோபா சந்திரசேகர் முதன்முறையாக ட்விட்டரில் இணைந்துள்ளார். அதில், முதல் பதிவாக தனது மகன் விஜயுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தளபதி அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி பல லைக்குகளை குவித்து வருகிறது.

பலரும் ஆக்டிவாக
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்கள் இன்றை காலகட்டத்தில் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள் பலரும் ஆக்டிவாகவே உள்ளனர். ஷோபா ட்விட்டரில் கணக்கு தொடங்கியதுமே பலரும் அவரை பாஃலோ செய்யத் தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











