எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் விஜய்க்கும் பிரச்னையா?.. அன்று நடந்தது என்ன? - ஷோபாவின் டாப் சீக்ரெட்

சென்னை: Shoba On Vijay (விஜய் குறித்து ஷோபா) நடிகர் விஜய் குறித்தும் அவரது தந்தை குறித்தும் ஷோபா சந்திரசேகர் பகிர்ந்திருக்கும் விஷயம் ரசிகர்களிடம் ட்ரெண்டாகியுள்ளது.

கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். கமர்ஷிய கிங்காக வலம் விஜய், தனது படங்கள் மூலம் சராசரியாக 300 கோடி ரூபாயை வசூலிப்பவர். சமீபத்தில் அவர் நடித்த வாரிசு படமும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக வாரிசு படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது. அவர் இப்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் பட்ஜெட்டே 300 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

Shoba Chandrasekhar Opes up About Vijay and SA Chandrasekhar

தந்தையே துணை: விஜய் இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தாலும் அவரை இந்த அளவுக்கு உயர்த்திவிட்டது என்னவோ அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான். விஜய்யின் கரியரில் மெகா ஹிட்டான படங்களை எல்லாம் விஜய்க்கு மடை மாற்றியது எஸ்.ஏ.சி. உதாரணமாக துப்பாக்கி உள்ளிட்ட படங்களை சொல்லலாம். அதேபோல் ஆரம்பகாலத்தில் விஜய்க்காக பல இயக்குநர்களிடம் எஸ்.ஏ.சி நேரடியாக சென்று வாய்ப்பு கேட்டதும் கவனிக்கத்தக்கது.

குடும்பத்துடன் பிரச்னை: இப்படி விஜய்க்கு எல்லாமுமாக இருந்த எஸ்.ஏ.சந்திரசேர் இப்போது அவரை விட்டு விலகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வருவதெல்லாம் சும்மா ஃபார்மலிட்டுக்குதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். இருவருக்கும் முட்டிக்கொண்டதற்கு பல காரணங்கள் யூகங்களாக கூறப்படுகின்றன. ஆனால் தங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை எஸ்.ஏ.சி தொடர்ந்து மேடையில் பேசிவருகிறார்.

ஏன் புகைப்படம் இல்லை?: இந்தச் சூழலில் விஜய் சமீபத்தில் தனது தாய் ஷோபாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அது ஷோபா - எஸ்.ஏ.சி ஆகியோரின் திருமண நாளை முன்னிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் என கூறப்பட்டது. அதன் மூலம் குடும்பத்துடன் இருந்த பிணக்கு தீர்ந்துவிட்டதாக விஜய் ரசிகர்கள் கருதினர். ஆனால் ஷோபாவுடன் மட்டும் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய் ஏன் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் எடுத்துக்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்தது.

ஷோபா பேட்டி: இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், "எங்களது திருமண நாள் குறித்து விஜய்க்கு ஃபோனில் சொன்னோம். உடனடியாக அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். வாட்ஸ் அப் டிபி வைக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொண்டதற்காக அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. எஸ்.ஏ.சந்திரசேகர் அந்த சமயத்தில் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றுவிட்டதால் அன்றைய தினம் அவருடன் விஜய்யால் புகைப்படம் எடுக்க முடியவில்லை" என்றார். இதன் மூலம் விஜய்க்கும், எஸ்.ஏ.சிக்கும் எந்த பிரச்னை இல்லை என்பதை அவர் மறைமுகமாக விளக்கியிருக்கிறார்.

Shoba Chandrasekhar Opes up About Vijay and SA Chandrasekhar

என்னால்தான் எல்லாம்: முன்னதாக கருமேகங்கள் கலைகின்றன ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் குறித்து பேசியபோது, "ஆரம்பத்தில் விஜய்யை வைத்து எந்த இயக்குநரும் படம் இயக்க முன்வரவில்லை. பாரதிராஜாவேகூட விஜய்யை அறிமுகப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டார். என்னால்தான் விஜய் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்திருக்கிறார்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X