Maaveeran: ஷங்கர் மகளை கலாய்த்த நடன இயக்குநர்.. சிவகார்த்திகேயனிடம் உடனடி மன்னிப்பு.. என்ன ஆச்சு?

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குநரான ஷோபி மாஸ்டர் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கரை கலாய்த்து போட்ட ட்வீட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஸ்கின், யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள மாவீரன் படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Shobi Master trolls Sivakarthikeyan and Aditi Shankar for Maaveeran Song

இந்நிலையில், அந்த படத்தின் ப்ரமோஷனை முன்னிட்டு வெளியான வண்ணாரப்பேட்டையிலே பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இருவரும் இணைந்து பாடிய நிலையில் தான் இருவரையும் ஷோபி மாஸ்டர் கிண்டல் செய்துள்ளார்.

மாவீரன் பாடல் ரிலீஸ்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தின் வண்ணாரப்பேட்டையிலே பாடல் இன்று காலை வெளியானது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அதிதி ஷங்கர் பாடி உள்ளார்.

பாடலை கேட்ட நொடியிலேயே சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலருக்கும் இந்த பாடல் பிடித்து விட்டது. சோஷியல் மீடியாவிலும் பாடல் டிரெண்டாகி வருகிறது. விருமன் படத்தைத் தொடர்ந்து அதிதி ஷங்கர் இந்த படத்திலும் பாடல் பாடி உள்ளார்.

Shobi Master trolls Sivakarthikeyan and Aditi Shankar for Maaveeran Song

சித் ஸ்ரீராமும் ஸ்ரேயா கோஷலும்: அந்த பாடலை கேட்ட நடன இயக்குநர் ஷோபி மாஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில், சித் ஸ்ரீராமும், ஸ்ரேயா கோஷலும் என்னம்மா பாடியிருக்காங்கப்பா.. என சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டு பங்கமாக கலாய்த்துள்ளார்.

உடனடி மன்னிப்பு: எங்கே சிவகார்த்திகேயனும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கரும் டென்ஷன் ஆகிடப் போறாங்க என நினைத்து அந்த ட்வீட்டுக்கு கீழே "ஸாரி.. ஸாரி.. சிவகார்த்திகேயனும் அதிதி ஷங்கரும் என்னம்மா பாடியிருக்காங்கப்பா" என பதிவிட்டுள்ளார்.

மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு: மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு இப்படி பகிரங்கமாக கலாய்க்கலாமா மாஸ்டர் என்றும் நக்கல்யா உனக்கு என ஷோபி மாஸ்டரின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்

Shobi Master trolls Sivakarthikeyan and Aditi Shankar for Maaveeran Song
.

அடுத்த மாதம் ரிலீஸ்: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், மடோன் அஸ்வின் இயக்கி உள்ள மாவீரன் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

வரும் ஜூலை 14ம் தேதி மாவீரன் திரைப்படம் வெளியாக உள்ளது. சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படமும் அதே தேதியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் மாவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X