Nivin Pauly: நிவின் பாலிக்கு ‘நேரம்’ நல்லா இல்லை.. வெளிநாட்டில் நடத்திய லீலை.. அம்பலமாகிடுச்சு?
திருவனந்தபுரம்: கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள பாலியல் தொல்லை புகாரில் அடுத்ததாக முன்னணி மலையாள நடிகர் நிவின் பாலி சிக்கியுள்ளார். வெளிநாட்டில் இருக்கும் போது தனக்கு நிவின் பாலி மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார்.
தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமான நிவின் பாலிக்கு நேரம் நல்லா இல்லை என்றே தெரிகிறது. பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராகவே மாறியவர் நிவின் பாலி.

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை படம் வெளிநாடுகளில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை அள்ளிய நிலையில், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் நிவின் பாலி மீது கேரளாவின் நேர்யமங்களம் பகுதியை சேர்ந்த இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
மாட்டிக்கிட்ட மலையாள சினிமா: ஹேமா கமிட்டியின் அறிக்கையை தொடர்ந்து கேரளாவில் SIT எனப்படும் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். நடிகர் ஜெயசூர்யா, இயக்குநர் சித்திக், இயக்குநர் ரஞ்சித் என ஏகப்பட்ட பெரும் புள்ளிகள் தொடர்ந்து சிக்கி வரும் நிலையில், அடுத்ததாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான நிவின் பாலி மீதே பலாத்கார வழக்கு பாய்ந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிவின் பாலி மீது பலாத்கார புகார்: வெளிநாட்டில் ஷூட்டிங் ஒன்றின் போது சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னை பலாத்காரம் செய்துவிட்டார் நிவின் பாலி எனக் குற்றம்சாட்டிய அந்த இளம் பெண் நிவின் பாலி உள்பட 6 பேர் மீது புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் எர்ணாகுளம், ஊன்னுக்கல் காவல் நிலையத்தில் நிவின் பாலி மற்றும் அவருடன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள 6 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாய் திறக்கும் பெண்கள்: சினிமாவில் பலம் வாய்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் பெண்களுக்கு சினிமா வாய்ப்பு ஆசைக்காட்டி பாலியல் தொல்லை கொடுப்பதும், படுக்கைக்கு அழைத்து அவர்களை பயன்படுத்தி விட்டு வாய்ப்புகள் வழங்காமல் ஏமாற்றி விட்டு செல்வதுமாக அட்டூழியங்கள் நடைபெற்று வரும் நிலையில், மலையாள திரையுலகில் உள்ள சினிமா துறையை சார்ந்த பெண்கள் வெளிப்படையாக வந்து தங்களுக்கு முன்னணி சினிமா பிரபலங்களால் ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து பேசி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் பூதாகரமான நிலையில், நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியையே மோகன்லால் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பல முன்னணி பிரபலங்கள் சிக்குவார்கள் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











