அய்யோ என்னாச்சு.. விமான நிலையத்தில் விஜய்சேதுபதியை எட்டி உதைத்த மர்ம நபர்.. ஷாக்கிங் வீடியோ!
சென்னை: விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதியை மர்ம நபர் ஒருவர் உதைக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் செல்வன் என போற்றப்பட்டு வரும் நடிகர் விஜய்சேதுபதி தமிழ், தெலுங்கு, இந்தி என தனது நடிப்பால் கலக்கி வருகிறார்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த விஜய்சேதுபதிக்கு சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது.

நல்ல மனசு
யாரை பார்த்தாலும் அரவணைத்து செயல்படும் விஜய்சேதுபதியை மக்கள் செல்வன் என்றே ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சக கலைஞர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் அளவுக்கு நல்ல மனசு கொண்டவர் விஜய்சேதுபதி.

தேசிய விருது
நடிகர் தனுஷ் உடன் புதுப்பேட்டை படத்தில் பேக்ரவுண்ட் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்திருந்த விஜய்சேதுபதி 67வது தேசிய விருது விழாவில் அவருடனே இணைந்து தேசிய விருது வென்று பலரது பாராட்டுக்களையும் பெற்றார். தேசிய விருது தனக்கு கிடைக்க காரணமான சூப்பர் டீலக்ஸ் இயக்குநர் தியாகராஜா குமார ராஜாவிடம் விருதை கொடுத்து பெற்றுக் கொண்ட வீடியோ வைரலானது.

அதிகரித்த ஹேட்டர்ஸ்
ஹேட்டர்களே இல்லாத நடிகராக விஜய்சேதுபதி கோலிவுட்டில் கிடுகிடுவென வளர்ந்து வந்த நிலையில், சமீப காலமாக அவர் வெளிப்படையாக சொல்லி வரும் சில கருத்துக்கள் சிலருக்கு கோபத்தை உண்டாக்கி வருகிறது. மேலும், தொடர்ச்சியாக அவரது சில படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் ஹேட்டர்கள் கணிசமாக அதிகரித்துள்ளனர்.
விஜய்சேதுபதி மீது தாக்குதல்
இந்நிலையில், விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதி பாதுகாவலர்களுடன் சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் எட்டி உதைக்கும் ஷாக்கிங் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்சேதுபதிக்கு என்ன ஆச்சு? என்று அந்த வீடியோ பார்த்த அவரது ரசிகர்கள் பதறிப் போய் விசாரித்து வருகின்றனர்.

ஷூட்டிங்கா
சில நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து விட்டு ஏதாவது படப்பிடிப்பா? என்றும் விஜய்சேதுபதி மீது யார் இப்படி தாக்குதல் நடத்துவது? அவங்களுக்கு என்ன பிரச்சனை என ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

எட்டி உதைத்து
டிசர்ட் மற்றும் ஜீன்ஸ் போட்ட இளைஞர் ஒருவர் செக்யூரிட்டியோடு விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் விஜய்சேதுபதியை பின்னால் இருந்து எட்டி உதைக்கும் பதபதைக்க வைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்தால் படப்பிடிப்பு போன்று தெரியவில்லை என்றும் வேண்டுமென்றே விஜய்சேதுபதியை இளைஞர் ஒருவர் தாக்கி உள்ளார் என்றும் தெரிகிறது.

பிரபலங்கள் மீது தாக்குதல்
இதற்கு முன் பல முறை ஏகப்பட்ட நடிகர்கள் மீது இப்படி பொதுவெளியில் திடீர் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், தல அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், பல நடிகைகள் பொதுவெளியில் மோசமான விதத்தில் தாக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











