twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா பாதிக்கப்பட்ட டைரக்டர் தயாளன் மரணம்

    |

    சென்னை : கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் தினமும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம். இதனால் சமூக வலைதளங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை பலரும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் அடுத்தடுத்து பலரும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த டைரக்டர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, நடிகர் பாண்டு உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கோலிவுட்டையே அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.

    Shocking! Another Tamil director Dhayalan passes away due to COVID 19

    தற்போது இந்த வரிசையில் டைரக்டர் தயாளனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பல படங்களில் அசிஸ்டென்ட்டாக பணியாற்றிய தயாளன், 2000 ம் ஆண்டு வெளியான கண்ணுக்கு கண்ணாக படத்தை இயக்கினார். இந்த படத்தில் முரளி, தேவயாணி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இவர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய முத்து உள்ளிட்ட சில படங்களில் சிறிய கேரக்டரிலும் நடித்துள்ளார்.

    கண்ணுக்கு கண்ணாக படத்திற்கு பிறகும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக பணியாற்றி வந்த தயாளன், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வந்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் இருந்தே சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    English summary
    director Dhayalan passes away due to COVID 19
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X