அதிர்ச்சி.. ஹோட்டல் திருப்பதியில் மர்மமான முறையில் பிரபல இயக்குநர் மரணம்.. போலீஸார் விசாரணை

லக்னோ: ஹோட்டல் திருப்பதியில் பிரபல போஜ்புரி இயக்குநர் சுபாஷ் சந்திர திவாரி என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது திரையுலகத்தை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சினிமா படப்பிடிப்புக்காக உத்தர பிரதேசத்தின் சோனபத்ரா எனும் இடத்திற்கு தனது படக்குழுவுடன் சென்ற இடத்தில் இப்படியொரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல போஜ்புரி இயக்குநரின் மர்ம மரணம் குறித்து உத்தர பிரதேச போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Shocking! Bhojpuri director Subhash Chandra Tiwari found dead in hotel Tirupati

போஜ்புரி இயக்குநர் மர்ம மரணம்: உத்தர பிரதேசத்தின் சோனபத்ரா எனும் இடத்தில் உள்ள ஹோட்டல் திருப்பதியில் தனது படக்குழுவுடன் புதிய படத்தின் ஷூட்டிங்கிற்காக முகாமிட்டு இருந்தார் பிரபல போஜ்புரி இயக்குநர் சுபாஷ் சந்திர திவாரி.

மே 24ம் தேதி அவரது அறையை விட்டு வெளியே வராத நிலையில், அவரை அழைத்தும், அவரது போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பார்த்தும் எந்தவொரு பதிலும் இல்லாத நிலையில், ஹோட்டல் அறையை வேறொரு சாவி போட்டு திறந்து பார்த்த போது அவர் இறந்து கிடப்பதை பார்த்து ஷாக் ஆகினர்.

உடனடியாக போலீஸாருக்கு போன் செய்ததில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் இயக்குநர் உயிரிழந்ததை உறுதி செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

எந்த காயமும் இல்லை: போஜ்புரி இயக்குநர் சுபாஷ் சந்திர திவாரியின் உடம்பில் எந்தவொரு வெளிப்புற காயங்களும் காணப்படவில்லை என முதல் கட்ட விசாரணையில் தெரிவித்த போலீஸார் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கூடிய விரைவில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் இயக்குநர் எப்படி இறந்தார் என்பது குறித்த தகவல்கள் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்தடுத்து 4 மரணங்கள்: மகாராஷ்ட்ராவின் டிவி நடிகர் நிதேஷ் பாண்டே, கடந்த மே 22ம் தேதி இளம் டிவி நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத், சாலை விபத்தில் சாராபாய் vs சாராபாய் சீரியல் நடிகை வைபவி உபத்யாயா என தொடர்ந்து அடுத்தடுத்து 4 திரையுலக பிரபலங்கள் உயிரிழந்த நிலையில், வட மாநில திரையுலகமே பேரதிர்ச்சியில் உறைந்துள்ளது.

More from Filmibeat

Read more about: death மரணம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X