அடக்கடவுளே.. யாஷிகா ஆனந்த் போல கார் விபத்தில் சிக்கிய பிக் பாஸ் பெண் போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக்
மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் பெண் போட்டியாளர் ஒருவர் கார் விபத்தில் சிக்கியுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நடிகையும் பிக் பாஸ் தமிழ் சீசன் 2ன் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி மிகப்பெரிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்நிலையில், பிக் பாஸ் இந்தி சீசன் 14ன் போட்டியாளரான அர்ஷி கான் கார் விபத்தில் சிக்கி உள்ளார்.

கார் விபத்து
பிக் பாஸ் இந்தி சீசன் 14ல் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்ட பிரபல டிவி நடிகை அர்ஷி கான் திங்களன்று காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். நடிகை அர்ஷி கான் விபத்தில் சிக்கிய தகவல் தீயாய் பரவியதும் பாலிவுட் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

தலையில் காயம்
டெல்லியில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை அர்ஷி கான். அங்கிருந்து காரில் கிளம்பினார். அர்ஷி கானை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் முற்பட, அவரது டிரைவரிடம் காரை கொஞ்சம் ஸ்லோவாக ஓட்டச் சொல்லி உள்ளார். டிரைவர் சட்டென ஸ்லோ செய்த நிலையில், பின்னாடி வந்த கார் நடிகை சென்ற காரை இடித்ததில் கண்ணாடி உடைந்து அவரது தலையில் பயங்கரமான காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி
தலையில் அடிபட்டு நடிகைக்கு ரத்தம் கொட்டுவதை பார்த்த ரசிகர்கள் பதறி துடித்துப் போனார்கள் கார் முன்பக்கம் பெரிதளவில் நொறுங்கிய நிலையில், இன்னொரு வண்டியில் நடிகையை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

நல்லவேளை தப்பித்தேன்
மருத்துவர்கள் தலையை ஸ்கேன் செய்து பார்த்ததில் எந்தவொரு உள்காயமோ வேறு எந்த ஆபத்தோ இல்லை என்று தெரிந்த நிலையில், திங்கட் கிழமை முழுவதும் மருத்துவமனையில் ஓய்வெடுத்த நிலையில், இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ள அர்ஷி கான் நல்லவேளை தப்பித்தேன் என ரசிகர்களின் பிரார்த்தனைக்கு நன்றி கூறியுள்ளார்.

யாஷிகா ஆனந்த்
பிக் பாஸ் தமிழ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூன் மாதம் நண்பர்கள் உடன் விருந்துக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக திரும்பும் போது நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் அவரது தோழி வள்ளி செட்டி பவனி உயிரிழந்தார். மூன்று மாதங்களாக எழுந்து நடக்க முடியாத அளவுக்கு யாஷிகாவுக்கு காலில் பலத்த அடி பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











