இந்த கதையை சொல்லவே இல்லையே? கேரள தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்ராவ்யா சுதாகர் தான் இந்த அக்ஷரா!
சென்னை: குளோபல் அழகி பட்டம் வென்ற கதையை சொன்ன அக்ஷரா ரெட்டி சொல்ல மறைத்த கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்த கேரள தங்க கடத்தல் வழக்கில் மாடல் அழகி ஸ்ராவ்யா சுதாகரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அந்த ஸ்ராவ்யா சுதாகர் தான் அக்ஷரா ரெட்டியாக பெயர் மாற்றம் கொண்டுள்ளார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன..

சர்ச்சை பிரபலங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் சர்ச்சை பிரபலங்களை தேடி பிடித்தே நிகழ்ச்சிக்கு கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களை மக்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்வதாகவும் பில்டப் கொடுத்து டிஆர்பியை ஏற்றி வருகின்றனர். இந்த சீசனில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் பின்னணியிலும் ஏகப்பட்ட சர்ச்சைகள் அடங்கி உள்ளதாக நெட்டிசன்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

பெயர் மாற்றம்
மாடல் அழகி ஸ்ராவ்யா ரெட்டியாக இருந்தவர் தான் சில குற்ற வழக்குகளில் விசாரிக்கப்பட்டு பெயர் டேமேஜ் ஆன நிலையில், தனது பெயரை ஸ்ராவ்யாவில் இருந்து அக்ஷரா ரெட்டி என மாற்றி வைத்துக் கொண்டார் என நெட்டிசன்கள் ஏகப்பட்ட ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

தங்க கடத்தல்
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற கேரள தங்க கடத்தல் வழக்கில் நடிகை மைதிலி தான் தன்னை டி.கே. ஃபைஸ் இடம் அறிமுகப்படுத்தினார் என்றும் தனக்கும் அந்த கடத்தல் வழக்கிற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கம் கொடுத்து இருந்தார்.

பிளாஸ்டிக் சர்ஜரி
அக்ஷரா ரெட்டியின் பழைய புகைப்படத்தை ஷேர் செய்த ரசிகர்கள் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தான் இப்படி மாறி உள்ளார் என்றும் ஏகப்பட்ட கோல்மால்களை செய்துள்ளார் என்றும் பல குற்றச்சாட்டுகளை அக்ஷரா மீது அடுக்கி வருகின்றனர்.

விஜய் டிவி நிகழ்ச்சி
கடந்த 2018ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டு வில்லேஜ் நிகழ்ச்சியில் ஸ்ராவ்யா சுதாகர் எனும் அக்ஷரா ரெட்டி பங்கேற்கிறார் என அப்போது செய்திகள் வெளியானதையும் நெட்டிசன்கள் நோட் பண்ணி தற்போது வைரலாக்கி வருகின்றனர். இவரும் விஜய் டிவி புராடெக்ட் தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதை சொல்லலையே
பாவனி ரெட்டி தனது முன்னாள் கணவர் இறந்தது, இரண்டாவதாக திருமணம் செய்ய நினைத்தவர் விட்டு பிரிந்தது உள்ளிட்ட உண்மையான கதைகளை சொன்னார். நிரூப் யாஷிகாவின் எக்ஸ் என்பதையே மூடி மறைக்காமல் வெளிப்படுத்தினார். ஆனால், அக்ஷரா ரெட்டி அப்பா பற்றியும் அண்ணா பற்றியும் பேசி நைஸா எஸ்கேப் ஆகிவிட்டு அவர் வாழ்வில் நடந்த பல விஷயங்களையும் மறைத்து விட்டார் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

பிரியாங்காவுக்கு தெரியும்
அக்ஷரா ரெட்டி பற்றி அனைத்துமே விஜய் டிவியின் தொகுப்பாளினியான பிரியங்காவுக்கு தெரியும் என்பதால் தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அக்ஷரா ரெட்டியை அந்த ஓட்டு ஓட்டுகிறார் என்றும் அக்ஷராவின் அழகில் மட்டும் ரசிகர்கள் மயங்கி விடக் கூடாது என்றும் அவர் ஷோவில் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்த்து ஓட்டுப் போடுங்க என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பாஸ்ட்ட பார்க்காதீங்க
அக்ஷரா ரெட்டியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எந்தவொரு போட்டியாளரின் பாஸ்ட் லைஃபையும் பார்க்க வேண்டாம். இப்போதைக்கு இந்த பிக் பாஸ் ஷோ வரைக்கும் பல தடைகளை சந்திச்சிட்டு வந்துருப்பாங்க.. அவங்க இந்த கேமில் எப்படி விளையாடுறாங்க என்பதை மட்டுமே பார்க்கலாம். ஒவ்வொரு போட்டியாளரையும் தோண்டினால் ஏகப்பட்ட மர்மங்கள் வெளிவரும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











