»   »  மஞ்சு, காவ்யாவுக்கு தெரியாமல் ஒரு பொண்டாட்டி: திலீப் பற்றி திடுக் தகவல்

மஞ்சு, காவ்யாவுக்கு தெரியாமல் ஒரு பொண்டாட்டி: திலீப் பற்றி திடுக் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை மஞ்சு வாரியருக்கு முன்பே நடிகர் திலீப்புக்கு ஒரு மனைவி இருந்தது தெரிய வந்துள்ளது.

பிரபல மலையாள நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திலீப் பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியருக்கு முன்பே திலீப்புக்கு ஒரு மனைவி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மஞ்சு தனது கெரியரின் உச்சத்தில் இருந்தபோது திலீப்புடன் ஓடிப் போய் அவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது திலீப்புக்கு பெரிதாக மார்க்கெட் எல்லாம் இல்லை.

முதல் மனைவி

முதல் மனைவி

திலீப் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு தனது தூரத்து உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். சினிமாவுக்கு வந்த பிறகு திலீப் மஞ்சுவுடன் நெருங்கிப் பழகியுள்ளார்.

விவாகரத்து

விவாகரத்து

திலீப் மஞ்சுவுடன் கள்ளக்காதல் வைத்திருப்பதை பார்த்த உறவினர்கள் அவரின் மனைவியிடம் இது குறித்து தெரிவித்தனர். அதன் பிறகு திலீப்பும், அந்த பெண்ணும் விவாகரத்து பெற்றனர்.

திருமணம்

திருமணம்

முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மஞ்சுவை மணந்தார் திலீப். முதல் மனைவி விவகாரம் மஞ்சுவுக்கும் சரி, திலீப்பின் தற்போதைய மனைவியான காவ்யாவுக்கும் சரி இத்தனை நாட்களாக தெரியாதாம்.

இதே வேலை

இதே வேலை

மஞ்சுவை மணந்த பிறகு திலீப் நடிகை காவ்யா மாதவனுடன் கள்ளத்தொடர்பு வைத்தார். அதை அறிந்த மஞ்சு கண்டிக்கவே இருவரும் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. திலீப்பின் முதல் மனைவி தற்போது வளைகுடா நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

English summary
According to reports, Dileep married his distant relative before Manju Warrier. Both Manju and Dileep's current wife Kavya have no idea of his first marriage it seems.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X