For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எங்கம்மா சாகும் போதும் நான் ஷூட்டிங்ல தான் இருந்தேன்.. ஆரியிடம் கமல் சொன்ன ஷாக்கிங் ஸ்டோரி!

  |

  சென்னை: அம்மா செத்துட்டாங்கன்னு தெரிஞ்சும் தயாரிப்பாளருக்காக ஷூட்டிங் பண்ணிட்டு வீட்டுக்கு போனேன் என நடிகர் ஆரி அர்ஜுனா கூறிய கண்ணீர் கதையை கமல் ஆமோதித்துள்ளார்.

  அகம் டிவியின் வழியாக அகத்துக்குள் சென்று போட்டியாளர்களின் சோகக் கதைகளை பற்றி விசாரித்தார் நம்மவர் கமல்.

  அனைவரையும் பார்த்து சபை நிறைஞ்சு இருக்கு என சந்தோஷமாக தனது உரையை தொடங்கினார்.

  அதுக்கு கூட அப்பா வரல.. குடிச்சிட்டு அடிப்பாரு.. அம்மாவும் சரியில்ல.. அழ வச்சிட்டாரு பாலாஜி!

  பலரையும் அழ வச்சிட்டீங்க

  பலரையும் அழ வச்சிட்டீங்க

  பள்ளியில் போடும் சத்துணவை குடும்பத்துடன் சாப்பிடவே பள்ளிக்கு போனேன் என நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் சொன்ன கதை அனைவரையும் அழ வைத்தது. செருப்பு விடுற இடத்தில படுத்து வளர்ந்தேன் என்றும், அப்துல் கலாமிடம் கவிதைக்காக பரிசு பெற்றதையும் சொன்ன கதையை கமல்ஹாசன் வெகுவாக பாராட்டினார். காமராஜர் நினைவுக்கு வந்தார் நிங்க கதை சொல்லும் போது என்றும் கமல் கூறினார்.

  நிஷாவுக்கு திருமண நாள்

  நிஷாவுக்கு திருமண நாள்

  விபத்து ஒன்றில் சிக்கி தனது குழந்தையின் காது பிஞ்சிடுச்சு என நிஷா சொன்ன கதையை பற்றி பேசிய கமல், இப்போ குழந்தைக்கு பரவாயில்லையா எனக் கேட்டார். பின்னர், அறந்தாங்கி நிஷாவுக்கு திருமண நாள் என்று கூற, சக போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக இதற்காகத் தான் கேமராவில் தனது மாமாவை நினைத்து உருகினார் நிஷா.

  வலி நிறைந்தது

  வலி நிறைந்தது

  மேலும், சனம் ஷெட்டியின் கதையில் பெயர் கூட தெரியாத ஆட்டோக்காரர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது உதவி செய்த மனப்பான்மை பற்றியும், ரியோ ராஜ் தனது வாழ்வில் கடந்து வந்த சோதனைகள் குறித்தும், அனிதா சம்பத்தின் வலி நிறைந்த கதை பற்றியும் ஒவ்வொரு வார்த்தை பேசிவிட்டு ஆரி பக்கம் வந்தார் கமல்.

  என் கதையும் அப்படித்தான்

  என் கதையும் அப்படித்தான்

  அம்மா இறந்த செய்தி அறிந்தும் தயாரிப்பாளர் பணம் வீணாகப் போய்விடக் கூடாது என ஷூட்டிங் செய்ததற்காக நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ஆரி, நிச்சயம் உங்க அம்மா அதற்காக பெருமை படுவாங்க, ஆடு புலி ஆட்டம்ன்னு ஒரு படம் நடிச்சிட்டு இருக்கும் போது, எங்கம்மாக்கு ஹார்ட் அட்டாக்குன்னு சொன்னாங்க..

  அம்மா இறந்தபோது நானும் ஷூட்டிங் பண்ணேன்

  அம்மா இறந்தபோது நானும் ஷூட்டிங் பண்ணேன்

  அவங்களுக்கு நிறைய தடவை இப்படி ஹார்ட் அட்டாக் வரும், அதெல்லாம் ஒண்ணுமில்ல என ஷூட்டிங்கில் நடித்து விட்டு, காரில் ஏறும் போது தான் அம்மா இறந்துட்டாங்கன்னே சொன்னாங்க என கமல்ஹாசனும் தனது சோகக் கதையை ஹவுஸ்மேட்ஸ் மற்றும் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டது பலரையும் உருக வைத்தது.

  சந்தோஷப்படுவாங்க

  சந்தோஷப்படுவாங்க

  வேலையே கிடைக்காத பையன், நாம இறக்கும் போது கூட வர முடியாத அளவுக்கு பிசியா வேலை செய்றானே நினைச்சு நிச்சயமா அம்மாவோட ஆன்மா சந்தோஷம் தான் படும் என்றும் நடிகர் ஆரி தேற்ற கமல் கூறும் போதே நடிகர் ஆரி அர்ஜுனா கண் கலங்கி விட்டார்.

  English summary
  Kamal Haasan tell his own story to actor Aari. Me also in shooting while my mom died. Aari and other participants getting shocked.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X