twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிர்ச்சி.. சன் மியூசிக்கின் முன்னாள் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்

    |

    சென்னை: சன் மியூசிக் தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்த விஜே ஆனந்த கண்ணன் நேற்று இரவு காலமானார்.

    புற்றுநோய் பாதிப்பால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.

    இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நல்ல நண்பர் ஆனந்த கண்ணன் மறைந்த செய்தியை ட்வீட் போட்டு அறிவித்துள்ளார்.

    அண்ணாத்த படத்தில் இணைந்த வேலாயுதம் வில்லன்.. சன் பிக்சர்ஸை வச்சு விளாசும் ரஜினி ரசிகர்கள்!அண்ணாத்த படத்தில் இணைந்த வேலாயுதம் வில்லன்.. சன் பிக்சர்ஸை வச்சு விளாசும் ரஜினி ரசிகர்கள்!

    ஆனந்த கண்ணன் காலமானார்

    ஆனந்த கண்ணன் காலமானார்

    90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் விஜேவான ஆனந்த கண்ணன் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு திடீரென இறந்து விட்டார். அவரது மறைவு செய்தி அறிந்த பிரபலங்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    சன் மியூசிக் விஜே

    சன் மியூசிக் விஜே

    சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சியில் விஜேவாக இருந்து வந்த ஆனந்த கண்ணன் அதன் பிறகு சன் மியூசிக் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னைக்கு வந்து அந்த சேனலில் விஜேவாக களமிறங்கினார். செம ஃபன்னாக நேயர்களுடன் பேசி பாடல்களை போட்டு வந்த ஆனந்த கண்ணன் சன் மியூசிக் விஜேக்களில் டாப்பாக இருந்தார்.

    சக விஜேக்கள்

    சக விஜேக்கள்

    ஆனந்த கண்ணன் விஜேவாக இருந்த போது தான் மகாலக்‌ஷ்மி, ஹேமா சின்ஹா, பிரஜன், பிளேடு தீனா போன்ற 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் விஜேக்கள் சன் மியூசிக்கில் கலக்கி வந்தார்கள். விஜேவாக இருந்து சினிமாவில் கால் பதிக்க முடியும் என்பதையும் ஆனந்த கண்ணன் அப்பவே நிரூபித்துக் காட்டினார்.

    சிந்துபாத்

    சிந்துபாத்

    சன் மியூசிக் மூலமாக மக்கள் மத்தியில் ஆனந்த கண்ணனுக்கு கிடைத்த செல்வாக்கை புரிந்து கொண்ட சன் டிவி இவருக்கென தனி சீரியலையே பிரம்மாண்டமாக உருவாக்கியது. சிந்துபாத் சீரியலில் ஹீரோவாக நடித்து அசத்திய ஆனந்த் கண்ணன் அடுத்ததாக சில படங்களில் லீடு ரோலும் செய்தார்.

    சினிமா என்ட்ரி

    சினிமா என்ட்ரி

    2012ம் ஆண்டு வெளியான அதிசய உலகம் 3டி படத்தின் மூலம் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார் ஆனந்த கண்ணன். அந்த படத்தைத் தொடர்ந்து ஆனந்த கண்ணன் விஜே பிரஜன் உடன் முள்ளும் மலரும் எனும் படத்தில் இணைந்து நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் திரைக்கு வரவில்லை. அதன் பிறகு அவர் நடிப்பில் உருவான இத்தனை நாளாய் எங்கிருந்தாய் படமும் வெளியாகவில்லை.

    வெங்கட் பிரபு படத்தில்

    வெங்கட் பிரபு படத்தில்

    இயக்குநர் வெங்கட் பிரபுவின் நல்ல நண்பரான ஆனந்த் கண்ணன் அவர் இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸாக நடித்திருந்தார். தனது நல்ல நண்பர் மறைந்து விட்டார் என்கிற செய்தியை இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட் போட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

    பிரபலங்கள் இரங்கல்

    பிரபலங்கள் இரங்கல்

    பிரபல தொகுப்பாளரும் நடிகருமான ஆனந்த கண்ணன் புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்த சோகத்தை அறிந்த தொகுப்பாளர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வெங்கட் பிரபுவின் ட்வீட்டை பார்த்த மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் ஆனந்த கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சோகத்தில் ரசிகர்கள்

    சோகத்தில் ரசிகர்கள்

    ஆனந்த கண்ணன் பெயரை கேட்டதும் அவரது முகம் 90ஸ் கிட்ஸ்களின் மனதுக்குள் வந்து சென்று விடும். இவ்வளவு சீக்கிரமாக புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஆனந்த கண்ணன் மறைந்த செய்தி ஏகப்பட்ட ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    English summary
    Former Sun Music popular VJ Anandha Kannan passes away due to Cancer illness on August 16th. Director Venkat Prabhu tweeted about his demise.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X