Saif Ali Khan stabbed: அதிர்ச்சி.. சைஃப் அலி கானுக்கு கத்திக்குத்து.. திருடவந்தவர்கள் செய்த கொடூரம்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் திருட வந்த நபர்களை தடுக்க முயன்றபோது நடிகர் சைஃப் அலி கானை திருடர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் லீலாவதி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை கரீனா கபூர் தனது கணவர் சைஃப் அலி கானுக்கு நேர்ந்த கத்திக் குத்து சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளார். திருட்டு முயற்சி மட்டும்தானா அல்லது கொலை முயற்சியா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

saif ali khan bollywood

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் இந்தியில் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அதிகளவில் நடித்து வருகிறார். பிரபாஸ் உடன் இணைந்து ஆதிபுருஷ் படத்தில் நடித்த சைஃப் அலி கான் கடந்த ஆண்டு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவரா படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

54 வயது நடிகர்: 1970ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லியில் பிறந்த சைஃப் அலி கான் 1993ம் ஆண்டு வெளியான பரம்பரா படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். அம்ரிதா சிங் என்பவரை 1991ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு சாரா அலி கான் மகளாக பிறந்தார். 2004ம் ஆண்டு அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து பிரிந்த சைஃப் அலி கான் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரை காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். மூத்த மனைவிக்கு 2 குழந்தைகளும் கரீனா கபூருடன் 2 குழந்தைகள் என மொத்தம் 4 குழந்தைகளுக்கு அப்பாவாக உள்ள சைஃப் அலி கானுக்கு 54 வயதாகிறது.

சைஃப் அலி கான் வீட்டிலேயே திருட்டு: மும்பையின் முக்கிய பகுதியான பாந்த்ராவில் பிரம்மாண்ட வீட்டில் கரீனா கபூர் உடன் வசித்து வரும் சைஃப் அலி கான் வீட்டின் செக்யூரிட்டியை எல்லாம் தாண்டி திருடர்கள் வீட்டில் கைவரிசை காட்டியது என்பதே அதிர்ச்சியான விஷயமாக உள்ளது. அந்த திருடர்களை மடக்கிப் பிடிக்க நினைக்கும் போது கத்திக்குத்து சம்பவம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மருத்துவமனையில் அனுமதி: உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் நடிகர் சைஃப் அலி கான் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சைகளை மருத்துவர்கள் குழு பார்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X