சிம்புவும், ஹன்சிகாவும் பிரிஞ்சுட்டாங்களா.. இல்லை என்கிறார் சிம்பு!
சென்னை: சிம்புவும் அவரது காதலி ஹன்சிகாவும் பிரிந்துவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. ஆனால் உண்மையில் அவர்கள் காதலர்களாக தான் உள்ளனராம். இதை சிம்புவே உறுதிப்படுத்தியுள்ளார்.
சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின. இதையடுத்து அவர்கள் தங்கள் காதலை ஒப்புக் கொண்டனர். காதலை ஒப்புக் கொண்ட கையோடு ஹன்சிகாவின் மார்க்கெட் அடியாகப் பார்த்தது.
இதையடுத்து அவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் திருமணம் என்று அறிவித்து சரிந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்தினார்.

பிரச்சனை
ஹன்சிகா, சிம்பு இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சனை இருந்து வருவதாக செய்திகள் வெளியாகின. சிம்பு திருமணத்திற்கு அவசரப்படுவதும், ஹன்சிகா தள்ளிப் போடுவதும் தான் பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்பட்டது.

வதந்தி
சிம்புவும், ஹன்சிகாவும் பிரிந்துவிட்டதாக வதந்திகள் தீயாக பரவி வருகின்றன. பாண்டிராஜ் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா தேர்வானதால் தான் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்று வதந்தி பரவியுள்ளது.

காதலர்கள் தான்
என்ன சிம்பு நீங்கள் ஹன்சிகாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் வருகிறதே என்று நாம் சிம்புவையே தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் கூறுகையில், இல்லை சார் அது எல்லாம் வெறும் வதந்தி, நாங்கள் ஒன்றாகத் தான் இருக்கிறோம் என்றார்.

நயன்தாரா
சிம்பு பாண்டிராஜ் படத்திற்காக தனது முன்னாள் காதலி நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் ஜோடி சேர்கின்றனர்.


Click it and Unblock the Notifications











