என்னது சுருதி டேஞ்சர் ஜோனில் இருக்காரா? இந்த வாரமும் எலிமினேஷனில் அதிரடி ட்விஸ்ட் இருக்குமோ?
சென்னை: எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் இந்த சீசன் முழுக்க சொல்லி வரும் நிலையில், இந்த வாரமும் பிக் பாஸ் எலிமினேஷனில் ஏதாவது ட்விஸ்ட் நடந்து விடுமோ என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனென்றால் டேஞ்சர் ஜோனில் சுருதி மற்றும் இசைவாணியின் பெயர்கள் இடம்பெற்று இருப்பது தான் அதற்கு காரணம்.
தாமரை காயினை திருடியதால் சுருதிக்கு வாக்குகள் வெகுவாக குறைந்து விட்டதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளன.

சுருதி ஜெயிப்பார்
இந்த பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டிலை நிரூப் அல்லது சுருதி வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக அபிஷேக் ராஜா தெரிவித்து இருந்த நிலையில், இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் சுருதி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது. எல்லாத்துக்கும் காரணம் சுருதி செய்த அந்த ஒரு தவறான விஷயம் தான் என்கிறார்கள்.

பெயரை கெடுத்த திருட்டு
கேம் விளையாடுகிறோம் என்கிற பெயரில் சுருதி பாவனி உடன் பிளான் போட்டு தாமரை செல்வியின் காயினை திருடியது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்து விட்டது. சுருதிக்கு ஓட்டுப் போட்டு வந்த ரசிகர்கள் திடீரென அவருக்கு ஓட்டுப் போடுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

கடைசி 4 இடத்தில்
இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருக்கும் கடைசி நான்கு பேர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது தான் ரசிகர்களை கொஞ்சம் ஷாக் ஆக்கி உள்ளது. இசைவாணி, சுருதி, சின்ன பொண்ணு மற்றும் அபிநய் உள்ளிட்ட 4 பேர் தான் இந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்று டேஞ்சர் ஜோனில் உள்ளதாக கூறப்படுகிறது.

இசைவாணிக்கு சிக்கல்
இந்த வாரம் நெருப்பு காயினின் சக்தியுடன் விளையாடி வரும் இசைவாணி அந்த காயினை பயன்படுத்தி நாமினேஷனில் இருந்து தப்பிக்க போவதில்லை என பிக் பாஸிடம் கூறிவிட்டார். கடந்த வாரம் முதல் ஆளாக சேவ் ஆனதை மனதில் கொண்டு இசை அப்படி சொன்ன நிலையில், இசைவாணி கடைசி 4 பேரில் டேஞ்சர் ஜோனில் சிக்கி உள்ள நிலையில், வெளியேற வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருவரில் ஒருவர்
பிக் பாஸ் வீட்டில் வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் சின்ன பொண்ணு மற்றும் அபிநய் ஆகிய இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கடைசி நேரத்தில் ஏதாவது ட்விஸ்ட் வைத்து விடுவார்களோ என்கிற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ட்விஸ்ட் இருக்குமோ
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், இந்த வாரமும் சின்ன பொண்ணு மற்றும் அபிநய் காப்பாற்றப்பட்டு இசைவாணி அல்லது சுருதி இருவரில் ஒருவரை எலிமினேட் செய்து விடுவாரோ என்கிற டவுட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சுருதி மற்றும் இசைவாணி மீது எந்தவொரு தவறும் இல்லை அவர்கள் சரியாகவே விளையாடி வருகிறார்கள் என அவர்களுக்கான ஆதரவும் ரசிகர்கள் மத்தியில் பெருகி வருகிறது.


Click it and Unblock the Notifications











