twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிர்ச்சி.. பிரபல தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் காலமானார்.. சோகத்தில் டோலிவுட் திரையுலகம்!

    |

    ஹைதராபாத்: பிரபல தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் கண்டிகொண்டா (Kandikonda) காலமானார். அவருக்கு வயது 49.

    தொடர்ந்து சினிமா பிரபலங்களின் மரண செய்திகள் ரசிகர்களையும் சினிமா உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி வருகின்றன.

    கொரோனா வைரஸ் குறைந்து வரும் நிலையில், துக்க செய்திகளும் குறைந்துள்ளன. இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பாடலாசிரியர் கண்டிகொண்டா காலமாகி இருப்பது தெலுங்கு சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

    தூங்கற மாதிரி நடிக்கறவங்கள எழுப்பலாமா... வேற லெவல் ஆட்டத்துக்கு உத்தரவாதம் தரும் சிம்பு! தூங்கற மாதிரி நடிக்கறவங்கள எழுப்பலாமா... வேற லெவல் ஆட்டத்துக்கு உத்தரவாதம் தரும் சிம்பு!

    பாடலாசிரியர் காலமானார்

    பாடலாசிரியர் காலமானார்

    ஏகப்பட்ட சூப்பர் ஹிட் தெலுங்கு படங்களுக்கு பாடல்களை எழுதி வந்த பிரபல தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் கண்டிகொண்டா உடல் நலக் குறைவு காரணமாக மார்ச் 12ம் தேதி காலமானார். அவருக்கு வயது 49. எழுத்தாளரும் பாடலாசிரியருமான கண்டிகொண்டாவின் மறைவு தெலுங்கு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இசையமைப்பாளர் இரங்கல்

    இசையமைப்பாளர் இரங்கல்

    டோலிவுட்டின் பெண் இசையமைப்பாளரான ஸ்மிதா தனது ட்விட்டர் பக்கத்தில், தெலுங்கு திரையுலக குடும்பத்துக்கு ஒரு சோகமான அறிவிப்பு, பிரபல பாடலாசிரியர் கண்டிகொண்டா உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார் என்பதை மிகுந்த மன வேதனையுடன் இங்கே அறிவிக்கிறேன் என ட்வீட் போட ரசிகர்களும், தெலுங்கு திரை பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஏகப்பட்ட பாடல்கள்

    ஏகப்பட்ட பாடல்கள்

    2001ம் ஆண்டு ரவி தேஜா நடிப்பில் வெளியான இது ஸ்ரவாணி சுப்பிரமணியம் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான கண்டிகொண்டா அந்த படத்திற்கு இரண்டு பாடல்களை எழுதி பிரபலமானார். அதனை தொடர்ந்து மீண்டும் ரவி தேஜா நடிப்பில் வெளியான இடியட் படத்திற்கும் இவர் பாடல்களை எழுதி உள்ளார். மகேஷ் பாபுவின் போக்கிரி, ராம்சரணின் சிறுத்த, துப்பாக்கி படத்தின் தெலுங்கு லிரிக்ஸ், லிங்கா தெலுங்கு வெர்ஷன், ஜூனியர் என்.டி.ஆரின் டெம்பர் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களுக்கு இவர் பாடல்களை எழுதியுள்ளார்.

    தொண்டை புற்றுநோய்

    தொண்டை புற்றுநோய்

    1973ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி ஆந்திராவின் நகுர்லபள்ளி எனும் ஊரில் பிறந்த இவர், நூற்றுக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களுக்கும், ஏகப்பட்ட தனிப்பட்ட ஆல்பங்களுக்கும் பாடல்களை எழுதி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தொண்டை புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    English summary
    Popular Telugu lyricist Kandikonda passed away at 49 due to throat cancer. Tollywood and fans are shocked. Top celebrities mourn the lyricist's great loss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X