லைவ் டெலிகாஸ்டால் மிரண்டு போன காஜல் அகர்வால்...தூங்க முடியவில்லை என புலம்பல்
சென்னை : வெங்கட் பிரபுவின் இயக்கும் முதல் வெப்சிரீயசான லைவ் டெலிகாஸ்ட் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி.,யில் ஒளிபரப்பாக உள்ளது. காஜல் அகர்வால் நடிக்கும் இந்த வெப் சிரீஸ், டிவி நிகழ்ச்சி தயாரிப்பு குழுவை பற்றியது.
அமானுஷிய சக்திகள் நிறைந்த வீட்டில், சூப்பர்ஹிட் நிகழ்ச்சி ஒன்றை தயாரித்தே தீவிர வேண்டும் என பிடிவாதமாக இருக்கும் அக்குழு சந்திக்கும் அனுபவங்கள் தான் இதன் கதை.

இந்த லைவ் டெலிகாஸ்ட் நிகழ்ச்சியில் நடித்த அனுபவத்தை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார். அப்போது அவர், இந்த சீரிசிற்காக நாங்கள் தேர்வு செய்த இடம் சரியானது என்றே நினைக்கிறேன். ரொம்பவும் தனியான ஒரு வீட்டில் சூட்டிங் நடத்தப்பட்டது.
அது வெங்கட் பிரபுவின் நண்பரின் வீடு. மலை உச்சியில் இருந்த அந்த வீட்டை சுற்றி எதுவும் இல்லை. அந்த வீடு இந்த சீரிசிற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. ஆனால் நான் தான் சூட்டிங் முடியும் வரை தூங்கவேயில்லை.
அங்கிருந்து கிளம்பிய பிறகும் எனக்கு பயம் போகவில்லை. பயத்துடன் தான் எழுந்திருப்பேன். இது எனக்கு மிகவும் பயமுறுத்தும் அனுபவமாக இருந்தது. மற்றபடி நான் முழுவதும் கேரக்டராக மட்டுமே இருந்தேன். செட்டிலும், செட்டிற்கு வெளியிலும் நான் கேரக்டராகவே இருந்தேன் என்றார்.
வெங்கட் பிரபு எழுதி, இயக்கிய இந்த வெப்சீரிசில் வைபவ் ரெட்டி, கயல் ஆனந்தி, பிரியங்கா, செல்வா, டேனியல் ஆன்னி பாப், சப்பு பஞ்சு அருணாசலம் ஆகியோர் நடித்துள்ளனர். இது பிப்ரவரி 12 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











