நீர் சறுக்கு விளையாட்டின் போது தடுக்கி விழுந்த பிரபல நடிகை.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: அகில உலக சூப்பர் மாடலான கிம் கர்தாஷியன் நீர் சறுக்கு விளையாட்டின் போது சறுக்கி விழுந்த வீடியோ காட்சி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

Recommended Video

திடீரென கிழந்த ஆடை...சங்கடத்தில் நடிகை

உள்ளாடை நிறுவனங்கள், அழகு சாதன பொருட்கள் என பிசினஸில் கொடிகட்டிப் பறந்து வரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 18 கோடி ரசிகர்கள் உள்ளனர்.

விரைவில் வரவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இவரது கணவர் கன்யே வெஸ்ட் போட்டியிடுவதாக அறிவித்து சமீபத்தில் பரபரப்பை கிளப்பி இருந்தார்.

ஆபாச வீடியோவால் கிடைத்த பிரபலம்

ஆபாச வீடியோவால் கிடைத்த பிரபலம்

2003 முதல் 2006ம் ஆண்டு வரை ஒளிபரப்பான தி சிம்பிள் லைஃப் எனும் டிவி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கிம் கர்தாஷியன். 2007ம் ஆண்டு வெளியான கிம் கர்தாஷியன் சூப்பர்ஸ்டார் எனும் ஆபாச வீடியோ, இவரை உலகளவில் பிரபலப்படுத்தியது. மேலும், கீப்பிங் அப் வித் கர்தாஷியன், பேட் கேர்ள்ஸ் கிளப், டாஷ் டால்ஸ் என ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் நடித்துள்ளார்.

சினிமாவில்

சினிமாவில்

2008ம் ஆண்டு வெளியான டிசாஸ்டர் மூவி, 2009ல் வெளியான டீப் இன் வேலி, 2018ல் வெளியான டெம்ப்டேஷன் மற்றும் கடந்த 2018ம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான ஓசன் 8 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேரி மீ எனும் படம் இவரது நடிப்பில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு சொத்தா

இவ்வளவு சொத்தா

மாடல் அழகி, டிவி, சினிமா நடிகை, தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கிம் கர்தாஷியன், மிகபெரிய தொழிலதிபராகவும் கலக்கி வருகிறார். ஸ்கிம்ஸ் எனும் உள்ளாடை நிறுவனம், KKW பியூட்டி எனும் அழகு சாதன நிறுவனம் என ஏகப்பட்ட பிசினஸ்களை செய்து வரும் இவர் 450 மில்லியன் டாலர்களுக்கும் மேல் சொத்து வைத்துள்ளார். கணவர் கன்யே வெஸ்டின் சொத்தையும் சேர்த்தால், 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து உள்ளது.

குழந்தையுடன் போட்டிங்

குழந்தையுடன் போட்டிங்

சாகச விரும்பியான கிம் கர்தாஷியன் சமீபத்தில் தனது குழந்தையுடன் போட்டிங் செய்யும் புகைப்படத்தையும், குடும்பத்துடன் அருகில் உள்ள ஏரி ஒன்றில் பொழுதை கழித்த புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கினார். இவர் பதிவிடும் போட்டோக்களுக்கெல்லாம் பல மில்லியன் லைக்குகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தவறி விழுந்த கிம்

தவறி விழுந்த கிம்

இந்நிலையில், தற்போது, நீர் சறுக்கு விளையாட்டை விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை கிம் கர்தாஷியன். அந்த வீடியோவில், கிம் பயிற்சியாளர்களின் உதவியோடு, செம கெத்தாக நீர் சறுக்கு விளையாட்டை என்ஜாய் பண்ணி வரும் நிலையில், திடீரென தவறி தண்ணீரில் விழும் காட்சி அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிரவைத்துள்ளது.

என்ன ஆச்சு

என்ன ஆச்சு

கிம் கர்தாஷியனுக்கு என்ன ஆச்சு? என துடித்துப் போன ரசிகர்களுக்கு, அவர் பாதுகாப்பாகவே ஒரு பக்கா பயிற்சியாளர்கள் குழுவுடன் சென்றதால், காயங்கள் ஏதும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டார் என்ற தகவல் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு அடைய செய்துள்ளது. பாதுகாப்பா இருங்க தலைவி என அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளாக பறக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X