twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிர்ச்சி.. ரயில்வே தண்டவாளத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இளம் நடிகை ஜோதி ரெட்டி

    |

    ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் இளம் துணை நடிகை ரயில்வே தண்டவாளத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    மகர சங்கராந்தி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் இப்படியொரு எதிர்பாராத அசம்பாவிதம் நடந்துள்ளது.

    ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ஜோதி ரெட்டியை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    காணாமல் போன நடிகை... சாக்கு மூட்டையில் பிணமாக மீட்பு… நடந்தது என்ன ?காணாமல் போன நடிகை... சாக்கு மூட்டையில் பிணமாக மீட்பு… நடந்தது என்ன ?

    புஷ்பா படத்தில்

    புஷ்பா படத்தில்

    தெலுங்கு திரைப்படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்தவர் ஜோதி ரெட்டி. சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் கூட இவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக பாடல்களில் நடனமாடி உள்ளார். இந்நிலையில், இவர் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தண்டவாளத்தில் ரத்த வெள்ளத்தில்

    தண்டவாளத்தில் ரத்த வெள்ளத்தில்

    26 வயதே ஆன இளம் துணை நடிகை ஜோதி ரெட்டி கடப்பா ரயில் நிலையத்தில் கடந்த திங்களன்று இரவு ரயில் ஏறி உள்ளார். ஹைதரபாத்திற்கு வர ரயில் ஏறிய இவர் செவ்வாயன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்க கலக்கத்தில் ஷாத் நகர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட நிலையில், இறங்கியதால் தவறி தண்டவாளத்தில் விழுந்து தலையில் பலத்த அடி பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார் எனக் கூறப்படுகிறது.

    உயிர் பிரிந்து விட்டது

    உயிர் பிரிந்து விட்டது

    கச்சிகுடா ரயில் நிலையம் என நினைத்துக் கொண்டு அவசரத்தில் அவர் இறங்கியது தான் இந்த விபத்துக்கு காரணம் எனக் கூறுகின்றனர். மேலும், ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தவர்களை அங்குள்ள மக்கள் பார்த்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே அவர் உயிர் பிரிந்து விட்டதாக கூறுகின்றனர்.

    சிசிடிவி இல்லை

    சிசிடிவி இல்லை

    ஜோதி ரெட்டியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைத்த உறவினர்கள் உடலை வாங்க முதலில் மறுத்தனர். ரயில்வே நிலையத்தின் சிசிடிவி ஃபூட்டேஜ் கேட்டும் அவர்கள் ஏன் தர வில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ரயில் நிலையத்தில் சிசிடிவியே இல்லை எனக் கூறப்படுகிறது.

    மர்ம மரணம்

    மர்ம மரணம்

    உண்மையிலேயே அந்த இளம் நடிகை தூக்க கலக்கத்தில் தான் இடறி விழுந்து இறந்து போனாரா? அல்லது வேறு யாராவது தள்ளி விட்டார்களா? என்கிற கோணத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்த சம்மதித்த நிலையில், நடிகையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

    English summary
    Tollywood Young Junior artist Jyothi Reddy death at railway station shocks cinema industry. Police filed a case over against her death.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X