twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கம் ஆன் கப்பர் சிங்' ...3டியில் மீண்டும் வெளியாகிறது ஷோலே!

    By Shankar
    |

    இந்தியத் திரையுலகின் எவர் கிரீன் ஆக்ஷன் க்ளாஸிக் படம் என போற்றப்படும் ஷோலே மீண்டும் புத்தம் புது வடிவில் வெளியாகிறது.

    இந்த முறை டிஜிட்டல் மற்றும் 3டி தொழில் நுட்பத்தில் இந்தப் படம் வருகிறது.

    இந்திய சினிமாவின் முதல் 10 சிறந்த திரைப்படங்களின் வரிசையில் என்றென்றும் நீங்காத இடத்தை பெற்றுள்ள இந்தி திரைப்படம் 'ஷோலே'.

    5 ஆண்டுகள்

    5 ஆண்டுகள்

    தர்மேந்திரா, அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார், ஹேமா மாலினி, ஜெயா பச்சன் மற்றும் அறிமுக வில்லன் அம்ஜத் கான் ஆகியோரை புகழ் ஏணியின் உச்சியில் அமர வைத்த ஷோலே திரைப்படம் 1975ம் ஆண்டு வெளியாகி தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது.

    ஆர்டி பர்மன்

    ஆர்டி பர்மன்

    இசை மேதை ஆர்டி பர்மன் இசையில் 'ஏ..தோஸ்தி', 'மெஹ்பூபா.. மெஹ்பூபா' போன்ற காலத்தால் அழிக்க முடியாத இனிய பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றன. இதன் டைட்டில் இசை மற்றும் பின்னணி இசை மட்டுமே தனி ரிக்கார்டாக வெளிவந்து விற்பனையல் சாதனை படைத்தது.

    38 ஆண்டுகளுக்குப் பிறகு

    38 ஆண்டுகளுக்குப் பிறகு

    கொண்ட இந்த திரைப்படம் 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முப்பரிமாண 3-டி தொழில் நுட்பத்தில் 25 கோடி ரூபாய் செலவில் மெருகேற்றப்பட்டுள்ளது.

    ஜனவரியில்

    ஜனவரியில்

    வரும் ஜனவரி மாதம் இத்திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடனும், நவீன 3-டி மற்றும் டி.ட்டி.எஸ். தொழில் நுட்பத்துடனும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

    தனி விழா

    தனி விழா

    விரைவில் மும்பையில் நடைபெறவுள்ள இந்த புதிய பதிப்பின் அறிமுக விழாவில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட நடிகர் - நடிகைகள் பங்கேற்கிறார்கள்.

    ஏற்கெனவே இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்தார் ராம் கோபால் வர்மா. ஆனால் அந்த முயற்சி தோல்வியைத் தழுவியது.

    Read more about: sholay re release ஷோலே
    English summary
    Bollywood's evergreen action classic Sholay is being released in new digital format in coming January.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X