»   »  ஷோலேவுக்கு இன்னொரு பெருமை

ஷோலேவுக்கு இன்னொரு பெருமை

Subscribe to Oneindia Tamil

1975ம் ஆண்டு வெளியான இந்தி படமான ஷோலேவை சிறந்த படமாக ஈரான்மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

ஷோலே சூட்டிங் ஸ்பாட்டில் அமிதாப்பச்சன், தர்மேந்த்ரா, சஞ்சீவ் குமார், கப்பர் சிங் அம்ஜத் கான்

ஈரான் நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஜூன் 22ம் தேதியும், ஜூலை 22ம்தேதியும் ஷோலே படத்தை ஒளிபரப்பியது.

அதேபோல பிரபல ஈரான் இயக்குனர்களான கியூமர்ஸ் புரஹ்மத் இயக்கிய ஸ்டிரேஞ்ச்சிஸ்டர்ஸ், கமால் தப்ரிஸியின் மேட்டர்னல் லவ் ஆகிய படங்களும் ஈரான் டிவியில்ஒளிபரப்பாகின.

இதைத் தொடர்ந்து. இந்தப் படங்களில் சிறந்த படம் எது என்று ஈரான் டிவி கருத்துக்கணிப்பையும் நடத்தியது.

இதில் ஷோலே படத்திற்கு அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. புரஹ்மத்தின்படத்திற்கு 2வது இடமும், தப்ரிஸியின் படத்திற்கு 3வது இடமும் கிடைத்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil