மாப்ளைகளா.. தஞ்சாவூரில் ஷூட்டிங்ய்யா.. சசிகுமாருடன் இணைந்த சூரி!
சென்னை : காமெடியன் சூரி, சூர்யா தயாரிக்கும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடந்து வருகிறது. இதில் நடித்து வரும் சூரி கேரவேனில் எடுத்த போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி தகவலை கூறியிருக்கிறார்.
20 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் சூரி. ஆனால் நமக்கு மிகவும் பரீட்சியமானது வெண்ணிலா கபடி குழு படத்தில் இருந்துதான். பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலே நடித்து வந்த அவருக்கு பரோட்டா சூரி என்று, பெயர் சொல்லும் படமாக அமைந்தது வெண்ணிலா கபடிக்குழு. அந்த படத்தை அடுத்து களவாணி, நான் மகான் அல்ல, ஆடுபுலி, தூங்காநகரம் என்று நிறைய பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. மேலும் வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தின் போது சூரி சேம ஃபார்மில் இருந்தார். ஆனால் சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து ஒன்று இரண்டு படங்கள் மட்டுமே அவரின் கை வசம் உள்ளது.
சூரி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் தலைவர் 168 படத்தில் காமெடியனாக நடிக்கிறார். இவர் முதல் முறையாக ரஜினியுடன் நடிக்க உள்ளார். அந்த நிகழ்வை மிக்க மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சூரி ஆனந்த பெரு வெள்ளத்தில் குதித்தார்.
தற்போது ட்விட்டரில் ஆக்கிடிவ்வாக இருக்கும் சூரி தனது நிகழ்வுகளை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார். தற்போது சூர்யா தயாரிப்பில் நடிகர் சசிகுமார் கதாநாயகானக நடிக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி, கலையரசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடந்து வருகிறது. இதில் நடித்து வரும் சூரி கேரவனில் எடுத்த போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி தகவலை கூறியிருக்கிறார். சூரி இனிமேல் பழைய படி காமெடியில் கலக்குவார் என்று ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











