twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரமாண்ட 'பாகுபலி'யை விட இந்தப் படத்தின் ஷூட்டிங்தான் எனக்கு சவாலாக இருந்தது.. நடிகர் ராணா தகவல்!

    By
    |

    சென்னை: பிரமாண்ட பாகுபலியை விட இந்தப் படத்தின் ஷூட்டிங்தான் கடும் சவாலாக இருந்தது என்று நடிகர் ராணா டக்குபதி தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    யாஷிகா தம்பிராமைய்யாவின் குத்தாட்டம்- வீடியோ

    பிரபுசாலமன் தமிழ், தெலுங்கு, இந்தியில் இயக்கியுள்ள படம், 'காடன்'. இந்தியில், ஹாத்தி மேரே சாத்தி என்ற பெயரிலும் தெலுங்கில் ஆரண்யா என்ற பெயரிலும் இது உருவாகிறது.

    1971 ஆம் ஆண்டு ராஜேஷ் கண்ணா, தனுஜா நடிப்பில் சாண்டோ சின்னப்பா தேவர் இந்தியில் உருவாக்கிய படம், ஹாத்தி மேரே சாத்தி.

    லாக்டவுனுக்கு முன்னாலதான்.. அதுக்குள்ள விளைஞ்சாச்சு.. விவசாயியாக மாறிய பிரபல வில்லன் நடிகர்! லாக்டவுனுக்கு முன்னாலதான்.. அதுக்குள்ள விளைஞ்சாச்சு.. விவசாயியாக மாறிய பிரபல வில்லன் நடிகர்!

    மையப்படுத்திய கதை

    மையப்படுத்திய கதை

    எம்.ஏ.திருமுகம் இயக்கி இருந்தார். இதுதான் எம்.ஜி.ஆர் நடிப்பில் தமிழில், நல்ல நேரம் என்று ரீமேக் செய்யப்பட்டது. யானையை மையப்படுத்திய கதை என்பதால், இந்த டைட்டிலை அனுமதி பெற்று இந்தி பதிப்புக்கான டைட்டிலுக்கு பயன்படுத்தி உள்ளனர். ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இதில் ராணா ஹீரோவாக நடிக்கிறார்.

    சவால் கொடுத்தது

    சவால் கொடுத்தது

    விஷ்ணு விஷால், ரோபோ சங்கர், அஸ்வின் ராஜா, ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். 2018 ஆம் ஆண்டு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியாவதாக இருந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தனக்கு கடும் சவாலை கொடுத்தது என்று நடிகர் ராணா தெரிவித்துள்ளார்.

    இந்திய சினிமா

    இந்திய சினிமா

    அவர் கூறியிருப்பதாவது: நான் நடித்த பாகுபலி படம் என் வாழ்க்கையை மட்டும் மாற்றவில்லை. அது இந்திய சினிமாவையே மாற்றியது. படங்கள் பற்றிய சிந்தனையை மாற்றி இருக்கிறது. நாங்கள் தயாரிக்கும் சினிமாவும் மாறி இருக்கின்றன. ஹாலிவுட்டில் ஸ்டார் வார்ஸ் படங்கள் செய்த மாற்றத்துக்கு குறைவானது இல்லை இது.

    யானை தும்பிக்கை

    யானை தும்பிக்கை

    பாகுபலியில் நான் நடித்த கேரக்டர், எனக்கு உடல் ரீதியான கஷ்டத்தை கொடுக்கவில்லை. ஆனால் காடன் அதை விட கடினமாக இருந்தது. இந்தப் படத்தில் யானையின் தும்பிக்கையை என் தோளில் தாங்க வேண்டியிருந்தது. அது சாதாரணமாக, 160-170 கிலோ எடை கொண்டது. இது எனக்கு கஷ்டம்தான். இருந்தாலும் ஒவ்வொரு படமும் எனக்கு புதிய அனுபவத்தை தருகிறது.

    திருமணம்

    திருமணம்

    நடிகர் ராணா மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. திருமணம் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதை ராணாவின் தந்தை சுரேஷ்பாபு உறுதிப்படுத்தி உள்ளார். நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்கிறார்கள்

    English summary
    Rana Daggubati says, Kaadan is the toughest film I have shot'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X