Sivakarthikeyan - சிவகார்த்திகேயன் படத்துக்கு வந்த சிக்கல் - படக்குழு அப்செட்

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு சிக்கல் எழுந்திருப்பதால் படக்குழு அப்செட்டாகியுள்ளது.

சின்னத்திரையில் நுழைந்து வெள்ளித்திரையில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். திறமையின் துணை கொண்டு அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். கமர்ஷியில் பாதையை தேர்ந்தெடுத்து அதில் கவனமாக செல்லும் சிவகார்த்திகேயன் கடைசியாக தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார்.

shooting of Sivakarthikeyans film has been stopped due to security issues

அடி வாங்கிய பிரின்ஸ்: தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை நிலை நிறுத்தும் நோக்கத்தில் பைலிங்குவலாக உருவான பிரின்ஸ் படத்தில் நடித்தார் எஸ்.கே. ஆனால் அவரது எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கியது பிரின்ஸ் ரிசல்ட். படம் திரையிடப்பட்ட ஒரு வாரத்திலேயே திரையரங்குகளில் இருந்து படம் தூக்கப்பட்டது. இதனால் டாக்டர், டான் என வரிசையாக நூறு கோடி ரூபாய் வசூலித்த சிவகார்த்திகேயன் அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்றார்.

மாவீரன் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். பிரின்ஸ் கொடுத்த தோல்விக்கு மாவீரன் மூலம் மருந்து தடவ முடிவெடுத்திருக்கும் சிவா இந்தப் படத்தை ரொம்பவே நம்பியிருக்கிறார். படம் ஜூலை மாதம் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸாகிறது. ஜெயிலர் படத்தின் ரிலீஸால் ஒரு மாதம் முன்னதாகவே ரிலீஸாகிறது மாவீரன்.

shooting of Sivakarthikeyans film has been stopped due to security issues

கமல் தயாரிப்பில் சிவா: மாவீரன் படம் ஒரு பக்கம் இருக்க அவருக்கு சந்தோஷம் கொடுக்கும் வகையில் கமல் ஹாசனின் தயாரிப்பில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்குகிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். கமல் ஹாசனின் தயாரிப்பில் படம் உருவாகிவருவதால் இந்தப் படம் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

காஷ்மீரில் ஷூட்டிங்: இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. இதனையொட்டி படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு படக்குழுவும் அங்கு சென்றது. இந்தப் படத்துக்காக சிவகார்த்திகேயன் சமூக வலைதள பக்கங்களிலிருந்து தற்காலிகமாக வெளியேறுகிறேன் என அறிவித்து கடுமையாக உழைத்துவருகிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்மிலும் கடுமையாக ஒர்க் அவுட் செய்தார்.

shooting of Sivakarthikeyans film has been stopped due to security issues

படத்துக்கு சிக்கல்: இந்நிலையில் அந்தப் படத்துக்கு சிக்கல் ஒன்று எழுந்திருக்கிறது. அதாவது காஷ்மீருக்கு சென்று படப்பிடிப்பை படக்குழு தொடங்கியது. ஆனால் அங்கு ஏற்பட்ட ஒரு சில பாதுகாப்பு பிரச்னைகளால் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஷ்மீரில் நீண்ட ஷெட்யூலுக்கு ப்ளான் செய்திருந்த படக்குழு பெரும் அப்செட்டுடன் சென்னை திரும்பியிருக்கிறது. நிலைமை சரியான பிறகு மீண்டும் அங்கு ஷூட்டிங் நடத்தப்படும் என தெரிகிறது. இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான் படம் தீபாவளிக்கு ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X