»   »  சூட்டிங் முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி முருகன் படக்குழு

சூட்டிங் முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி முருகன் படக்குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகார்த்திகேயன் நடித்து வந்த 'ரஜினி முருகன்' படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்ததை அடுத்து படப்பிடிப்பு குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இறுதி கட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. படத்தின் இசை

காக்கி சட்டை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே சிவகார்த்திகேயன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட இயக்குனர் பொன்ராம் இயக்கும் ‘ரஜினி முருகன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இமான் இசையமைத்து வரும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வருகிறது.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

'ரஜினி முருகன்' படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

படப்பிடிப்பு முடிவு

படப்பிடிப்பு முடிவு

கீர்த்தி சுரேஷ் உடல்நிலை சரியாகி வந்தவுடன் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். மொத்த படப்பிடிப்பும் ஏப்ரல் 17ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து இறுதிகட்டப் பணிகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஏப்ரல் 25ல்

ஏப்ரல் 25ல்

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 25ம் தேதியும், இசை வெளியீட்டு ஜுன் 7ம் தேதியும், வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 17ல்

ஜூலை 17ல்

ஜுலை 17ம் தேதி படமும் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டூடியோ கிரீன் வெளியிடுகிறது.

English summary
After Khaki Sattai, Sivakarthikeyan dons the lead role in a film titled Rajini Murugan. Malayalam actress Kirthi Suresh is pairing with Sivakarthikeyan. Raj Kiran, Samuthirakani and Soori are donning important roles. D Imman is composing the music. Ponram who had earlier directed the film Varuthapadatha Valibar Sangam is directing this film. Thirupathi Brothers in association with Eros International is producing the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil