twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த நேரத்துல ஷூட்டிங் போறது, போருக்குப் போற மாதிரிதான் இருக்கு.. பிரபல சின்னத்திரை நடிகை கவலை!

    By
    |

    சென்னை: இப்போது படப்பிடிப்புக்குச் செல்வது போருக்குச் செல்வது போல இருக்கிறது என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    'எதோ ஒரு சாபம் என கொரோனா தாக்கும்' - பாடலாசிரியர் கலைகுமார்

    தமிழில் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் டெபினா பானர்ஜி.

    உதயன் இயக்கி இருந்த இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்பாபு, பாண்டியராஜன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

     வில்லன் நடிகர் பொன்னம்பலத்துக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை.. கமலை அடுத்து ரஜினியும் உதவி! வில்லன் நடிகர் பொன்னம்பலத்துக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை.. கமலை அடுத்து ரஜினியும் உதவி!

    அலாவுதீன் தொடர்

    அலாவுதீன் தொடர்

    இந்தப் படத்துக்குப் பிறகு தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்த டெபினா, ஜெயா டிவியில் வெளியான மாயாவி என்ற தொடரில் நடித்தார். இந்தத் தொடர் கவனிக்கப்பட்டது. இதற்குப் பிறகு இந்தி டிவி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். ஏராளமான டிவி தொடர்களில் நடித்துள்ள இவர், சன் டிவியில் இப்போது ஒளிப்பரப்பாகி வரும் அலாவுதீன் என்ற டிவி தொடரிலும் நடித்து வருகிறார்.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    லாக்டவுன் காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளன. சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் சீரியல் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஷூட்டிங் தொடங்கினாலும் நடிகர், நடிகைகள் வருவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். தெலுங்கு சின்னத்திரை படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்ட நடிகை மற்றும் நடிகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நடிகை டெபினா

    நடிகை டெபினா

    இந்நிலையில், சில இந்தி தொடர்களின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. அலாவுதீன் தொடரின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. கொரோனா காலத்தில் படப்பிடிப்புக்குச் செல்வது பற்றி இந்தத் தொடரில் நடிக்கும் டெபினா கூறும்போது, இந்த நேரத்தில் படப்பிடிப்புக்குச் செல்வது போருக்குச் செல்வதற்கு சமமானது என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

    சாத்தியம்

    சாத்தியம்

    படப்பிடிப்பு நடத்துவது கஷ்டமானதுதான். பாதுகாப்பை குறைத்துக்கொள்ள கூடாது. பேப்பரில் இருக்கும் விதிகள், ஒழுங்குமுறைகள் பற்றி தெரிந்திருந்தாலும் சில விஷயங்கள் சாத்தியமே இல்லை. ஹேர்ஸ்டைலிஷ்ட், பிபிஇ கிட் (PPE)-டை கண்டிப்பாக அணிய வேண்டும். ஆனால், தொடர்ந்து 12 மணி நேரம் அதை அணிந்து கொண்டு நிற்பதற்கு வழியே இல்லை. இந்த தொடருக்காக எனது காஸ்ட்யூம்ஸ், நகைகள் உள்ளிட்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது.

    கடினமாக இருக்கிறது

    கடினமாக இருக்கிறது

    என் ஆடை நீளமானது. அது தரையை துடைத்தபடி இருக்க வேண்டும். அப்படி செல்லும் போது, எல்லா கொரோனா வைரஸையும் துடைத்து என் உடையில் வைத்துக்கொள்வது போல தோன்றும் எனக்கு.இந்த கேரக்டருக்காக நாள் முழ்வதும் கிரீடம் அணிந்திருக்க வேண்டும். நாள் முழுவதும் அதை அணிந்துகொண்டு நடிப்பது கஷ்டம்தான். அதை கழற்றி யாரிடமும் கொடுக்க முடியாது. கொடுத்தால் சானடைசர் கொண்டு கழுவவேண்டும். இது உண்மையில் கடினமானதாகத்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

      English summary
      Actress Debina Bonnerjee says, shooting in lockdown is like going to a war
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X