»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய படங்களின் படப்பிடிப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்க கோரி, வியாழக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக சென்னைமாவட்ட சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் அறிவித்துள்ளார்.

கே.ராஜன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் திரைப்படத் தொழிலின் பொது நன்மை கருதி, தயாரிப்புச் செலவைக்குறைத்து நடிகர்களின்சம்பளம், பேட்டா, வீண் செலவுகள் ஆகியவற்றை குறைக்க வேண்டும் என நான் அறிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்தேன்.

அதையொட்டி, தயாரிப்பாளர்கள் சங்கமும் சில நடைமுறைகளை பின்பற்ற முன் வந்தது. திரைப்பட இயக்குனர்கள் சங்கமும் இன்றைய தொழிலின்பின்னடைவை உணர்ந்து அறுபது நாட்களுக்குள், அறுபது ரோல்களுக்குள் படமெடுப்பது, நான்கு உதவி இயக்குனர்களுக்கு மேல் வைத்துக்கொள்வதில்லை என தீர்மானித்தனர்.

நடிகர்கள் சங்கமும் 5 ஸ்டார் ஹோட்டலுக்குப் பதில் 3 ஸ்டார் ஹோட்டலில் தங்குவது, பெட்ரோல் பேட்டா வாங்குவதில்லை என முடிவெடுத்து அறிவித்தனர்.

ஆனால், படப்பிடிப்பு முடிவதற்குள் அறுபது சதவீதமும், ரிலீஸிற்கு முன் நாற்பது சதவீதமும் சம்பளம் தருவது என்ற லேப் லெட்டர் என்ற அடிப்படைக்கருத்தை மட்டும் ஏற்க முடியாது என்றும் மொத்த படப்பிடிப்பு முடிவதற்குள் மொத்த சம்பளமும் தந்து விட வேண்டும் என்பதில் நடிகைகள் மட்டும்பிடிவாதமாக இருப்பதால் தான் பிரச்சனை முடியாமல் இருக்கிறது என்பது வேதனைக்குரியதாக இருக்கிறது.

ஆகவே, திரைப்படத்தொழிலின் நன்மை கருதி 40 சதவீதம் லேப் லெட்டர் முறையை ஏற்றுக்கொள்வது தான் நியாயம், தர்மம். படத் தயாரிப்பாளர்களும்,படம் வியாபாரம் ஆகிவிட்டால், பேசிய சம்பளத்தை ஏமாற்றாமல் கொடுத்து விட வேண்டும்.

இன்று யாரோடு நாம் போட்டி போட்டு, படப்பிடிப்பு நடத்தக்கூடாது என பிடிவாதமாக இருக்கிறோம் என்பதை தயாரிப்பாளர்கள் சங்கம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

இன்று வரை பல கோடி சம்பாதித்து விட்டவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு, அன்றாடம் வேலை செய்தால்தான் சாப்பிட முடியும் என்றிருக்கின்றசின்ன நடிகர்கள், தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வைத்திருக்கின்ற பிரச்சனை இருபது பெரிய நடிகர், நடிகைகளிடம் மட்டும்தான்.

அன்றாடம் வேலை செய்தால் தான் சாப்பாடு என இந்த தொழிலையே நம்பி வாழும் நூற்றுக்கணக்கான நடிகர்கள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைமறந்து 42 நாட்களாக புதுப்படப்பிடிப்பு தொடங்கக்கூடாது எனபிடிவாதமாக இருப்பது நியாமில்லாதது.

ஒத்துவராத நடிகர், நடிகைகளை கஷ்டப்படுத்தாதீர்கள். நம்முடைய நியாயமான கோரிக்கைகளை ஏற்பவர்களை வைத்து படங்களை உடனே ஆரம்பிக்கவேண்டும். அல்லது புதுமுகங்களை வைத்து சிறு முதலீடுப் படங்களை ஆரம்பித்து தொழில் தொய்வின்றி தொடர்ந்து நடந்திட துணிச்சலோடு வருபவர்களுக்குவழிவிடுங்கள். ஊக்கம் தாருங்கள்.

தொழிலின், தொழிலாளர்களின் பொது நன்மை கருதி புதன்கிழமை மாலைக்குள் தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர்கள் சங்கமும் விட்டுக்கொடுக்கும்மனப்பான்மையுடன் பேசி சுமுக முடிவுக்கு வந்து, புதிய படங்களின் படப்பிடிப்பு வியாழகிழமை தொடங்கிட நல்ல முடிவினை அறிவிக்க வேண்டும்.

இல்லையென்றால், வியாழக்கிழமை காலை முதல் பிலிம் சேம்பர் வளாகத்தில் உண்ணாவிரதம் தொடங்கிடுவேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு நாள் உண்ணாவிரதமா அல்லது சாகும்வரை உண்ணாவிரதம் நான் இருக்க வேண்டுமா என்பதை நீங்கள் தான் தெரிவிக்க வேண்டும் என்று ராஜன் தனதுஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more about: chennai, cinema, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil