அட்லீ பார்த்தா கண்டிப்பா வாய்ப்பு நிச்சயம்.. அசிஸ்டன்ட் டைரக்டராக செம ஸ்கெட்ச் போட்ட ஹரி பிரசாத்!

சென்னை: இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக மாற அட்லீ எவ்வளவு உழைப்பு போட்டிருப்பார் என்பது அவரையும் அவரைச் சுற்றி உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால், இன்று இந்தியாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் இயக்குநராக மாறியுள்ள அட்லீயிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக வாய்ப்பு கேட்டு ஹரிபிரசாத் எனும் குறும்பட இயக்குநர் தனது மொத்த திறமையையும் ஒரு ஷார்ட் பிலிம் ஆக எடுத்து அதையே ரெஸ்யூம் ஆக வெளியிட்டுள்ளார்.

கனவுத் தொழிற்சாலையான சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என பல இளைஞர்கள் போராடி வருகின்றனர். சிலர் நல்ல கதைகளை வைத்துக் கொண்டும், சிலர் தங்களது மேக்கிங் ஸ்டைல் தெரியும்படி குறும்படங்களை இயக்கியும் சினிமாவுக்குள் நுழைய வாய்ப்பு தேடி வருகின்றனர். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக எந்திரன், நண்பன், சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் அட்லீ பணி புரிந்துள்ளார்.

Short Film Director Hari Prasad sends a power packed video resume to Atlee

ஷங்கர் உதவி இயக்குநர்: ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ முதல் படத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா மற்றும் ஜெய் என முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து சூப்பர் ஹிட் படத்தையும் கொடுத்திருந்தார்.

நண்பன் படத்தின் போது நடிகர் விஜய்யுடன் கிடைத்த நெருக்கமான நட்பு ராஜா ராணி வெற்றிக்கு பிறகு தெறி படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்தது. தெறி படம் ஹிட் அடித்த நிலையில், தொடர்ந்து மெர்சல் மற்றும் பிகில் என வரிசையாக அட்லீக்கு 3 படங்களை இயக்கும் வாய்ப்பை விஜய் அளித்தார்.

வாய்ப்பு தருவாரா அட்லீ: பிகில் திரைப்படத்தை முடித்த அட்லீ பாலிவுட்டில் ஷாருக் கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படத்தை இயக்கி 1100 கோடி வசூல் வேட்டையை சாதித்து காட்டியுள்ளார். இந்நிலையில், உலகளவில் அட்லீயிடம் உதவியாளராக மாற பல பேர் போட்டி போட்டு வரும் நிலையில், ஹரி பிரசாத் இப்படியொரு முயற்சியை செய்திருக்கிறார். அவருக்கு நிச்சயம் அட்லீ வாய்ப்பு அளிப்பார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X