குறும்படம் எடுக்கிறவங்களுக்கு நல்ல சினிமா எடுக்க தெரியாது - இணை இயக்குநர் என்.ஏகம்பவாணன்

சென்னை: நல்ல குறும்படம் எடுக்கிறவங்க எல்லாம் நல்லா சினிமா எடுக்க மாட்டாங்க அவர்கள் உதவி இயக்குநர்களாக சேர தகுதி உள்ளவர்கள் மட்டுமே என்று இணை இயக்குநர் ஏகம்பவாணன் கூறியுள்ளார். அனுபவசாலி உதவி இயக்குநர்களை கொண்டு கட்டாயம் எல்லா படங்களுக்கும் கதை விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தனது முகநூலில் நல்ல இயக்குநர் யார் தயாரிப்பாளர்களை ஜெயிக்க வைப்பவர்கள் யார் என்று எழுதியுள்ளார். று முதலீட்டில் படம் எடுத்துவிடலாம் என்று எந்த அனுபவசாலி உதவி இயக்குநரும் கூறியதே கிடையாது. அவருக்குத்தான் கதை கேட்கும் பட்ஜெட், பிராட்டிகல் பிராப்ளம், பிஸினஸ் எல்லாம் தெரியும்.

Short Film makers all are not Good Directors-Associate Director Ekambavanan

அவர் பள்ளி படிப்பை முடித்திருக்க மாட்டார். கதை, கவிதை படிக்க மாட்டார். எழுதி இருக்கவும் மாட்டார். உள்ளூர் சினிமாவை உள்ளூர்ந்து பார்க்கமாட்டார். ஆங்கில சினிமா, உலக சினிமா வாடையே ஆகாது. சினிமாவிற்கு வந்த உடனே கூச்சமின்றி தன்னை இயக்குநர் என்பார். எந்த பெரிய இயக்குநரிடமும் பணியாற்றியிருக்க மாட்டார். சின்னஞ்சிறு முதலீட்டு படங்களில் ஒன்றிரண்டில் வேலை பார்த்திருக்கலாம்.

ப்பூ, சினிமா இவ்வளவு, இலகுவானதா என்றெண்ணியிருப்பார். அவரின் குரு பயன்படுத்திய வித்தைகளான எப்.எம்.எஸ் சேட்டிலைட் ஆடியோ ரைட்ஸ் ஏரியா இவ்வளவு போகுமென யாரையாவது அழைத்து வருவார். படம் பிடிப்பார், ஆடியோ பங்ஷன் வைப்பார், முடிஞ்சா 20/30 தியேட்டரில் ரிலீஸ் செய்வார். உடனே அடுத்த ஆள தேடிப்போயிடுவார். முதல் படத்தோட ட்ரெயிலரை காமிப்பார், குறைஞ்ச பட்ஜெட்லியே படமான்னு ஒருத்தர் பையனோட வருவார் பையன் ஹீரோ, படமோ ஜீரோ.

இவர்களை அனுபவசாலி இயக்குநர்களோடு ஒப்பிடவே கூடாது. படிப்பு இருக்கோ இல்லையோ, ஆர்வமும் அக்கறையும், சினிமா மீது தீராத காதலும் கொண்டு ,சென்னையில் ஹோட்டல் பெட்ரோல் பங்க் என வேலை செய்தபடி பல வருஷங்கள் இயக்குநர்களின் வாசல்படிகளில் நின்று வாய்ப்பு கேட்டு சினிமாவிற்கு தேவையான கதை, கவிதை, இந்திய சினிமா, ஆங்கில சினிமா, உலக சினிமா என அனைத்தையும் பார்த்து, நல்லது கெட்டதுக்கு ஊருக்கு போகாமல், பின் ஒரு இயக்குநரிடம் சேர்ந்து பல வருடங்கள் முறையாக பாடம் பயின்று (கிளாப், அசிஸ்டெண்ட், காஸ்டியூம், எடிட்டிங், ஆக்ஷன் கண்டினியுடி, டயாலாக் சொல்லித்தருதல் என்று முன்னேறி) பல்வேறு கதை விவாதங்களில் பங்கேற்று, தனக்கென பல கதைகள் எழுதி, அதற்கு தலைப்பு வைத்து, அதையும் இயல்பிலோ அல்லது திருடப்பட்டோ பறிகொடுத்துவிட்டு இன்னும் போராடுகிறானே அவனே பல வருட அனுபவம் பெற்ற இயக்குநர்.

ஒரே ஒரு கார்த்திக் சுப்புராஜ், குறும்படம் எடுத்து ஜெயிச்சவர், அவர் போல இன்னும் சில ஷாட் பிலிம் மேக்கர்ஸ் ஜெயிக்கிறாங்க. அவங்க பேர சொல்லிக்கிட்டு நூற்றுக்கணக்கான அரை வேக்காடுகள் பைவ் டி யில் குறும்படம் எடுத்துக்காட்டி, சினிமா இயக்கும் வாய்ப்பு வாங்கி எத்தனை புரொடியூசரை வீட்டுக்கு அனுப்புனாங்க.

ஷாட் பிலிம் இயக்குநர்களின் ஆதர்ஷ தயாரிப்பாளர் சிவிகே எங்கே. அனுபவசாலிகளை தமிழ் திரைப்படங்களில் தவிர்க்கிறார்கள். அதனாலேயே இதர மொழி திரையுலகம் இன்னும் நன்றாக உள்ளது. தமிழ் சினிமா கதை உள்ளடக்கத்தில் தன்னை சரி செய்துகொள்ள வேண்டும் . அதற்கு மறுபடியும் அனுபவசாலி உதவி இயக்குநர்களை கொண்டு கட்டாயம் எல்லா படங்களுக்கும் கதை விவாதம் நடத்தப்பட வேண்டும். முதல் நான்கு உதவி இயக்குநர்கள் கட்டாயம் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். முக்கியமான ஒன்று நியாயமான, நல்ல சம்பளம் காலா காலத்திலேயே தரவேண்டும்.

நல்ல குறும்படம் எடுக்கிறவங்க எல்லாம் நல்லா படம் எடுக்க மாட்டாங்கன்றத புரிஞ்சிக்கனும். அவர்கள் உதவி இயக்குநர்களாக சேர தகுதி உள்ளவர்கள் மட்டுமே (முன்பு பத்திரிக்கையில் கதை, கவிதை எழுதி, தொகுப்பு போட்டு வாய்ப்பு கேட்டதை போல) அவர்களை குறைஞ்சது 3 படமாவது பணியாற்றச் சொல்லுங்கள்.

படித்தமைக்கு நன்றி.

என்றென்றும் ஏராளமான அன்புடன்
என்.ஏகம்பவாணன்
இணை இயக்குநர்- பாடலாசிரியர்- வசன கர்த்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X