நாச்சியார் திருமொழி என்ற குறும்படம் - பல இளைஞர்களுக்கு பாடம் சொல்லுகிறார் ராஜகணேஷ்

சென்னை: பிகில் கைதி என தீபாவளி கொண்டாட்டமாக இருக்க ,சமூக வலைத்தளங்களில் ஒர் குறும்படத்தின் போஸ்டர் குறித்து வைரல் டாக் கோடம்பாக்கத்தில் மட்டுமின்றி பல பிரபலங்களும் இதை பற்றி பேசி வருகின்றனர்.

ஆம் நாச்சியார் திருமொழி எனும் குறும்படம் இக்குறும்படத்தை இயக்கியவர் 22 வயது கல்லூரி மாணவராம் ஆனால் போஸ்டரோ வெறித்தனமாக உள்ளது , இதனை இன்று காலையில் பிக்பாஸ் புகழ் மாடல் அழகி மீரா மிதுன், ஜாம்பி பட இயக்குனர் புவன் , கல்யாண வீடு சீரியல் அஞ்சனா, மாரி திரைப்பட புகழ் ஜார்ஜ் போன்ற பல பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது,

Short film Naatchiyar thirumozhi poster released.

அதுமட்டுமின்றி இக்குறும்படத்தினை 'அமேசான் ப்ரைம் UK US ' இல் இன்று வெளியாகியுள்ளது இதை வெளிநாட்டுகளில் உள்ளவர்கள் மட்டும் பார்க்க இயலும் என்றும் விரைவில் அனைத்து மக்களின் பார்வைக்கு கொண்டு வர யூடியூபில் ரிலிஸ் செய்யப்படும் என்று இக்குறும்படத்தில் நடித்த கதாநாயகன் அர்விந்த் கூறியுள்ளார் ....பேசிக் கொண்டிருக்கையில் அருகில் அமர்ந்திருந்த சின்னஞ்சிறு சிறுவனைக் காட்டி 'இவர் தான் இந்த படத்தின் டைரெக்ட்டர் -- இவரை என்ன கேக்கனுமோ கேட்டுக்கோங்க' என்று சொல்ல -
எளிமையான தோற்றம்... கொண்ட ஒரு சின்ன பையன் போல் இருந்தார் ராஜகணேஷ்.

மேற்படி இக்குறும்படத்தினைப் பற்றி அந்த இயக்குனரிடம் கேட்கையில் ' 18 வயசுல ஷார்ட் ஃபிலிம் டைரெக்ட் பன்னுற ஆசை வந்துச்சு முதல் குறும்படம் ட்ராப் ஆகிருச்சு ஆனால் அது நிறைய அனுபவத்த குடுத்துச்சு ..2வது குறும்படம் 19 வயதில் வெறும் 2000ரூபாய்க்கு மனித நேயம் எடுத்தேன் ஆனால் அதில் முதன் முதலில் நடிச்ச குட்டி பையன் பின் விஜய் டிவி நடத்தும் கிங்ஸ் ஆஃப் காமெடி ஜுனியர்ஸின் டைட்டில் வின்னர் ஆகி பெறுமை சேர்த்தான் , முன்னனி இதழ்களிலும் மனிதநேயம் நல்ல விமர்சணத்தையும் விருதுகலையும் பெற்றது.....மனித நேயம் ரிலீஸ் செய்த மறுநாளே 'நாச்சியார் திருமொழி ' கதையை ஆரம்பித்து விட்டேன் முழுதாக முடித்த கதையை நிறைய நடிகர்களிடம் கூறினேன் அனைவரும் 'ஆஹோ ஓஹோ ' என்று கூறியும் நடிக்க மறுத்தனர் ஏனெனில் இக்கதை ஓர் ராவான அடல்ட் கன்டென்ட் ஸ்டோரி....

Short film Naatchiyar thirumozhi poster released.

ஒரு முறை எல்லாம் அமைந்தும் பணக்குறைவால் ஷுட்டிங் தடை பட்டது.....எனவே தயாரிப்பாளர்களைத் தேடி ஓடினேன்...எல்லா தயாரிப்பாளர்களுக்கும் கதை பிடித்திருந்தும் சில காட்சிகளை மாற்றியமைக்கச் சொன்னார்கள் சிலர் கதையையே மாற்ற சொன்னார்கள் ...எனக்கு என் கதை என்னுடைய படமாக வரவேண்டுமே தவிற தயாரிப்பாளரோ அல்லது ஹீரோவுடைய படமாகவோ ஆகிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன் எனவே நாமே தயாரித்து இயக்குவோம் என்று முடிவு செய்து நிறை திரைப்பட ஆடிஷன்கள் சென்றேன் அதில் கிடைத்த வாய்ப்பே காஞ்சனா 3 , முதல் படத்திலேயே நல்ல கதாப்பாத்திரமும் பணமும் கிட்டியது ...சரி பணம் பத்தும் செய்யும் என்பது சரிதான் ஆனால் என் கதைக்கு நன்கு நடிப்பவர் அல்ல அந்த கதாப்பாத்திரமாக மாறிவிடும் கதாநாயகன் தேவைப்பட்டது ஏனெனில் அந்த ஆண் கதாப்பாத்திரம் தான் கதையை சுமக்கும் தூண்...மாதம் ஒரு முறை அர்விந்த் அண்ணனை சந்தித்து தேனீர் அருந்திக் கொண்டு சினிமாப்பயணம் குறித்து பேசும் வழக்கம் உண்டு ...அவரை சந்தித்து அவரிடம் ஆண் கதாப்பாத்திரத்தில் நடிக்க சிறந்த நடிகர் தேவை என்று கேட்கலாம் என்று சென்ற போது, அவர் முகத்தைப் பார்த்ததும் என் குறும்படத்தின் ஆண் கதாப்பாத்திரத்திற்கு 10 பொருத்தமும் இவருக்குப் பொருந்தும் என எண்ணி ...'அண்ணே என் அடுத்த படத்துல நீங்க தான் ஹீரோ ' என நான் கூறியதும் அதிர்ச்சியடைந்த அவர் முதலில் நடிக்க மறுத்தார் பின் கதையை கேட்டவுடன் முழு ஈடுபாடோடு அந்த கதாப்பாத்திரமாகவே மாறி நடித்தார்....ஹுட்டிங் முடித்து 1 வருடம் ஆகிவிட்டது ...விரைவில் யுடியூபில் வெளியிடப்படும்....என் குறும்படம் ஆஹோ ஓஹோ என்று இருக்கும் என்று நான் கூற வில்லை ஆனால் மற்ற குறும்படங்களை விட இது புதுமையாக இருக்கும்..நாச்சியார் திருமொழி ராவான அடல்ட் படம் நீங்க வயசுக்கு வந்திருந்தா நீங்களும் பார்க்களாம் நண்பா, ஹேப்பி தீபாவளி..!' என்று நகைத்து விட்டு சிரிப்போடு விடைபெற்றார் AR ராஜ கணேஷ்...!

Short film Naatchiyar thirumozhi poster released.

நாச்சியார் என்ற வார்த்தை பாலா திரைப்படங்களில் அதிகம் உபயோகம் செய்ய படும் வார்த்தை. நாட்சியார் திருமொழி என்று வேறு இந்த இயக்குனர் பெயர் வைத்துஇருக்கிறார். இரத்தின சுருக்கமாக என்ன சொல்ல வருகிறார் இந்த இளைஞன் என்று புரிய விட்டாலும் - படத்தை பார்த்த பலர் பெருமையாக பேசும் பொழுது ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்க தான் செய்யும் என்று நம்ப தோன்றுகிறது .

வெற்றி பெற வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X