twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கருக்கு செல்லும் 9 வயது தமிழ் சிறுமி பற்றிய குறும்படம்

    By Siva
    |

    சென்னை: தமிழகத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கமலியை பற்றிய குறும்படம் 2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள மகாபலிபுரத்தை சேர்ந்தவர் 9 வயதான கமலி மூர்த்தி. ஸ்கேட்போர்டை அசாத்தியமாக பயன்படுத்தும் திறன் கொண்டவர். கமலி கவுன் அணிந்து ஸ்கேட்போர்டை பயன்படுத்தியபோது எடுத்த புகைப்படம் பிரபல ஸ்கேட்போர்டரான டோனி ஹாக்கின் கண்ணில் பட்டது.

    Shortfilm about 9-year-old TN skater Kamali shortlisted for Oscars 2020

    காலணிகள் கூட இல்லாமல் ஒரு சிறுமி அசாத்தியமாக ஸ்கேட்போர்டை பயன்படுத்தியதை பார்த்து வியந்த டோனி அந்த புகைப்படத்தை பகிர கமலி உலக அளவில் பிரபலமானார்.

    இதையடுத்து நியூசிலாந்தை சேர்ந்த ஷஷா ரெயின்போ என்கிற இயக்குநர் தமிழகத்திற்கு வந்து கமலியை பற்றி 24 நிமிட குறும்படத்தை இயக்கினார். அந்த குறும்படம் கடந்த மாதம் நடந்த அட்லாண்டா திரை விழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை பெற்றது.

    'அயோக்கியா'த்தனம்: பார்த்திபனின் ட்வீட்டுக்கு ப்ளூ சட்டை மாறன் காரணமா?'அயோக்கியா'த்தனம்: பார்த்திபனின் ட்வீட்டுக்கு ப்ளூ சட்டை மாறன் காரணமா?

    கமலி, அவரின் தாய் சுகந்தி மற்றும் பாட்டியை பற்றிய அந்த குறும்படம் 2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

    6 வாரங்களாக படமாக்கப்பட்ட அந்த குறும்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த மும்பை சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Shor film about Kamal Moorthy, 9-year-old Tamil Nadu girl has been shortlisted for the 2020 Academy Awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X