மதுரை பகுதியில் குறும்படம் எடுக்கும் ஆர்வமுள்ளவரா நீங்கள்? - நிழல் வழங்கும் அரிய வாய்ப்பு!
மதுரை : நிழல் இதழ் தமிழகம் முழுவதும் குறும்பட பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறது. பதியம் தொலைநோக்கு படைப்பகத்துடன் இணைந்து இதுவரை 50 குறும்பட பயிற்சி பட்டறைகளை நிழல் இதழ் நடத்தியுள்ளது.
51-வது குறும்பட பயிற்சி பட்டறை மதுரையில் மே 7 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் குறும்பட பயிற்சி பட்டறையில் 'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களின் இயக்குநர் மீரா.கதிரவன், 'உறுமீன்' இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி, 'எங்கிட்ட மோதாதே' இயக்குநர் ராமு செல்லப்பா, நடிகர் வசுமித்ர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சியளிக்கிறார்கள்.

இந்த பயிற்சி பட்டறையில் திரைக்கதை எழுதுவது, கேமராவை இயக்குவது, ஷாட்களாக பிரித்து எப்படி படமாக்குவது, ஒளிப்பதிவின் நுணுக்கங்கள், நடிப்பு, எடிட்டிங், தொலைக்காட்சிகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதுதல், மேக்கப் பயிற்சி என அனைத்தும் கற்றுத் தரப்படும். புகழ்பெற்ற திரைப்படங்களும், ஆவணப்படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.
திரைப்படத்துறையில் இல்லாமல் வேறு பணிகளில் இருக்கும், அதேநேரத்தில் குறும்படம் இயக்குவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சென்னை வராமலே திரைப்பட உருவாக்கம் குறித்து கற்றுக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. மதுரை தெப்பக்குளம் சந்திர குழந்தை மஹாலில் மே 7 முதல் 12-ம் தேதி வரை குறும்பட பயிற்சி பட்டறை நடக்கிறது.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் தங்குவதற்கும் தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்யப்படும். கட்டணமாக குறைந்த தொகை வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு நிழல் திருநாவுக்கரசு அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். அவரது கைபேசி எண் : 94444 - 84868


Click it and Unblock the Notifications











