திருச்சியில் குறும்பட பட்டறை: டிராபிக் ராமசாமி, பஞ்சுமிட்டாய் இயக்குனர்கள் பங்கேற்பு

By Siva

திருச்சி: டிராபிக் ராமசாமி, பஞ்சுமிட்டாய் பட இயக்குனர்கள் கலந்து கொள்ளும் குறும்பட பட்டறை திருச்சியில் நடைபெற உள்ளது.

நிழல் மற்றும் பதியம் இணைந்து நடத்தும் 52வது குறும்பட பட்டறை வரும் ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறுகிறது.

Shortfilm workshop in Trichy

இந்த பட்டறையில் நடிப்பு, திரைக்கதை, இயக்கம், எடிட்டிங், கேமரா, மேக்கப் முதலியவை கற்றுக் கொடுக்கப்படுகிறது. பட்டறைக்கு வருபவர்களை குறும்படம் எடுக்க வைத்து எடிட்டிங் செய்து அவர்களுக்கு அளிக்கப்படும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் நிழல் குழுவால் மட்டுமே இம்முறை கடைபிடிக்கப்படுகிறது. அவர்கள் இதை 15 ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். 6 நாட்களில் சினிமாவின் அனைத்து துறைகளையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.

திருச்சியில் நடக்கும் பட்டறையில் டிராபிக் ராமசாமி பட இயக்குனரான திருச்சியை சேர்ந்த விக்கி, பஞ்சுமிட்டாய் பட இயக்குனர் மோகன் செங்கோடன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அனைத்து ஊர்க்காரர்களும் இந்த பட்டறையில் கலந்து கொள்ளலாம். கட்டணம் உண்டு. பட்டறையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 900314 4868/9444 484868 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X