பிரபலமாகி வரும் ஷார்ட் பிளிக்ஸ்.. குறும்பட கலைஞர்களுக்கு அடித்தது யோகம்!

சென்னை : உலகம் முழுவதும் ஊரடங்கில் அடங்கி இருக்கும் நிலையில் பொழுதுபோக்கிற்காக உலகம் முழுவதுமாக தற்பொழுது நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் ஓடிடி தளங்களுக்கு திரும்பி உள்ளது.

திரையரங்குகள் இன்னும் திறக்க பல மாதங்கள் ஆகும் என்ற நிலையில் வெப் சீரிஸ்கள் திரைப்படங்கள் என விதவிதமாக ஆன்லைன் தளங்கள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் தென்னிந்திய குறும்பட கலைஞர்களுக்காக அதிரடியா வந்துள்ளது ஷார்ட்பிளிக்ஸ் செயலி, இதில் பல்வேறு தரமான குறும்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இடாகினி ஹாரர் குறும்படம் தற்பொழுது அனைவரையும் கவர்ந்து வருகிறது.

தனியாக செயலிகள் இல்லை

தனியாக செயலிகள் இல்லை

திரைப்படங்களையும் வெப் சீரிஸ்களையும் வெளியிட பல்வேறு ஓடிடி தளங்கள் இருந்து வரும் நிலையில் குறும்படங்கள் இயக்கும் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு இன்றுவரை குறிப்பிடக்கூடிய வகையில் தனியாக எந்த ஒரு தளங்களும் செயலிகளும் இல்லை, நாம் குறிப்பிட்ட தரமான குறும்படங்களை பார்க்க வேண்டுமென்றால் யூடியூப்பில் மட்டுமே தேடி பிடித்து பார்க்க வேண்டிய நிலை இன்றுவரை இருந்து வருகிறது.

குறும்பட கலைஞர்களை ஊக்குவிக்கும்

குறும்பட கலைஞர்களை ஊக்குவிக்கும்

இந்நிலையில் குறும்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது ஷார்ட்பிளிக்ஸ் செயலி, மிக எளிமையாக இருந்த இடத்திலிருந்தே கைப்பேசியின் வாயிலாக தரமான குறும்படங்களை கண்டுகளிக்க இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள ஷார்ட்பிளிக்ஸ் செயலியின் அறிமுக விழா மற்றும் முதல் பிரிமியர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாயாஜாலில் நடைபெற்றது.

சிறந்த 5 குறும்படங்களை

சிறந்த 5 குறும்படங்களை

இதில் இயக்குனர் சிறுத்தை சிவா, இயக்குனர் விஜய் மில்டன், இயக்குனர் அமீர், இயக்குனர் எஸ் சரவணன் என பல திரைப் பிரபலங்களுடன் இணைந்து மாயாஜால் திரையரங்கின் மேலாளர் திரு.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு சிறந்த 5 குறும்படங்களை தேர்வு செய்து மாயாஜால் திரையரங்கில் திரையிடப்பட்டது.

இடாகினி

இடாகினி

இவ்வாறு தரமான குறும்படங்களை எப்போதுமே ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஷார்ட்பிளிக்ஸ் செயலியில் தற்பொழுது இடாகினி உள்ளிட்ட பல குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இக்குறும்படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன், படத்தொகுப்பாளர் கே.எல் பிரவீன், தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் பல திரைப்பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இடாகினி குறும்படத்தை வெளியிட்டுள்ளனர்.

ஆணித்தனமான கதை

ஆணித்தனமான கதை

ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இடாகினி குறும்படம் மிகச் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் அற்புதமான இசை அமைப்புடன் சிறந்த கதைக்களத்தில் உருவாகி வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சிலர் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கி விபத்துகளை வேறுபடுத்தி பல உயிர்களை நொடிப்பொழுதில் சிதைத்து விடுகின்றனர் என்ற ஆணித்தனமான கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த குறும்படம் இப்பொழுது அனைவரையும் மிரட்டி எடுத்து ரசிக்க வைத்துள்ளது.

இயக்குனர் சிதம்பரம் அன்பழகன்

இயக்குனர் சிதம்பரம் அன்பழகன்

நடிகர் ஜீவாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சீறு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த திறமைமிக்க வளர்ந்து வரும் நடிகையான சரண்யா ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்க பல புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்த இடாகினி குறும்படத்தை சிதம்பரம் அன்பழகன் இயக்கியிருக்கிறார். தர்ஷன் ரவிக்குமார் இந்த படத்திற்கு மிகச் சிறப்பான இசையை கொடுத்து அனைவரையும் மிரட்டி இருக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ராஜேஷ் துரைக்கண்ணன் பயமுறுத்தும் திகில் காட்சிகளை ஒளிப்பதிவு செய்து மிரட்டி எடுத்து இருக்கிறார்.

பகுதிக்குள் பதிவேற்றம்

பகுதிக்குள் பதிவேற்றம்

இவ்வாறு இடாகினி உள்ளிட்ட பல தரமான குறும்படங்களை வெளியிட்டுள்ள ஷார்ட்பிளிக்ஸ் பல்வேறு குறும்படங்களை பதிவேற்றம் செய்து வரும் நிலையில், ஷார்ட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகக்கூடிய சிறந்த குறும்படங்களை ஷார்ட்பிளிக்ஸ் ஒரிஜினல் என்ற பகுதிக்குள் பதிவேற்றம் செய்துள்ளது. இவ்வாறு குறும்படங்களை ஊக்குவிக்கும் வகையில் உருவாகியிருக்கும் ஷார்ட்பிளிக்ஸ் செயலியும், அதில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இடாகினி ஹாரர் குறும்படமும் அனைவரையும் கவர்ந்து பிரபலமாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X