தமிழன் உலகில் முதலில் எதையும் செய்யக்கூடாதா?..தமிழனே தமிழனுக்கு எதிரி.. பார்த்திபன் வேதனை !

சென்னை : உலகத்தின் முதல் படத்தை தமிழன் பண்ணக்கூடாது என்று ஒரு தமிழனே நினைப்பது கேவலமான விஷயம் என்று இயக்குநர் பார்த்திபன் கூறியுள்ளார்.

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. படம் பார்த்த பலரும் பார்த்திபனின் திறமையை பார்த்து வியந்து பாராட்டி வருகிறார்கள்.

வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா, ரேகா நாயர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை 'அகிரா புரொடக்‌ஷன்ஸ்' தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இரவின் நிழல்

இரவின் நிழல்

இரவின் நிழல் திரைப்படம் கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் Non Linear முறையில் என்பது தான் கூடுதல் சிறப்பம்சம். நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா எனும் புது நாயகி இதில் அறிமுகமாகியுள்ளார்.

ப்ளூசட்டை மாறன் குற்றச்சாட்டு

ப்ளூசட்டை மாறன் குற்றச்சாட்டு

இரவின் நிழல் படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை வாரிக்குவித்து வருகிறது. இப்படத்தினை விமர்சனம் செய்த ர் ப்ளூசட்டை மாறன் பார்த்திபன் மக்களை ஏமாற்றிவிட்டார்,ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பல படம் உள்ளது. இரவின் நிழல் உலகின் முதல் படம் இல்லை என கூறி எதிர்மறை விமர்சனம் செய்தார். மாறனின் இந்த குற்றச்சாட்டிற்கு பார்த்திபன் ட்வீட்டர் மூலம் பல விளக்கங்களை கொடுத்துவிட்டார்.

தமிழனே தமிழனுக்கு எதிரி

தமிழனே தமிழனுக்கு எதிரி

இந்நிலையில், பாண்டிச்சேரி திரையரங்கில் மக்களோடு மக்களாக படம் பார்த்த பார்திபன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உலகத்தின் முதல் படத்தை ஒரு தமிழன் செய்துவிடக்கூடாது என்று ஒரு தமிழனே நினைப்பது மிகவும் கேவலமான விஷயம். உலகத்தின் முதல் படத்தை எவனோ வெளிநாட்டில் இருப்பவர்கள் தான் செய்வார்கள் என்று நினைப்பது வருத்தம் அளிக்கிறது. நம்மிடம் அனைத்து திறமையும் உள்ளது நாம் எதையும் செய்யலாம் என்றார்.

புரளிகளை நம்ப வேண்டாம்

புரளிகளை நம்ப வேண்டாம்

இதே வெளிநாட்டினர் செய்திருந்தார் பாராட்டுவார்கள், நாம் செய்தால் சந்தேகத்தோட கூகுளில் தேடுகிறார்கள். சத்தியமா நானும் கூகுளில் தேடி பார்த்தேன் Non Linear உருவான முதல் படம் இதுதான். படம் குறித்து வரும் புரளிகளை நம்ப வேண்டாம் அப்படி சர்ச்சை கிளம்புவது படத்திற்கு இன்னும் மேலும் வலுசேர்க்கும் என்றார். மேலும், பெரிய கமர்சியல் திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு இந்த திரைப்படத்திற்கு கிடைத்து இருப்பதை பார்த்து நான் மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கிறேன். புதிய பாதைக்கு அடுத்தபடியாக 32 ஆண்டுகளுக்கு பிறகு இத்திரைப்படம் எனக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X