சேலையில் பிரபல நடிகையின் புதிய போட்டோஷூட்.. 'இது கில்லர் லுக்' என புகழும் பாசக்கார ரசிகர்கள்!
மும்பை: பிரபல நடிகை சேலையில் எடுத்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.
பிரபல இந்தி நடிகை ஸ்ரத்தா தாஸ். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்தி, தெலுங்கு
கன்னட படங்களிலும் நடித்துள்ள ஸ்ரத்தா, தமிழில், ஜித்தன் ரமேஷ் வில்லனாக நடித்துள்ள மிரட்சி படத்தில் நடித்திருக்கிறார். இந்தி மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரத்தா மற்ற ஹீரோயின்களை போல, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

நீச்சல் குள ஸ்டில்ஸ்
இதற்காகவே ஏராளமான ரசிகர்கள் இவரை பின் தொடர்கிறார்கள். ஒர்க் அவுட், பிகினி என போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடும் ஷ்ரத்தா தாஸ், சமீபத்தில் வெளியிட்டிருந்த நீச்சல் குள ஸ்டில்ஸ் வைரலாயின. டூ பீஸ் உடையில் ஸ்டைலாக பார்த்தபடி அதில் போஸ் கொடுத்திருந்தார் அவர்.

தொப்புள் தெரிய
அதற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ், கமென்ட்ஸ் வந்து விழுந்துள்ளன. இந்நிலையில் இப்போது பிரின்டட் சேலை கட்டிய புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். தொப்புள் தெரிய அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகின்றன. இதற்கும் ஏராளமான லைக்ஸ் கிடைத்துள்ளன.

கவிதை கேப்ஷன்
வழக்கமாக அனைத்து போட்டோக்களுக்கும் கவிதையாக கேப்ஷன் பதிவிடும் ஷரத்தா, இதற்கு பதிவிடவில்லை. சில நெட்டிசன்ஸ், சேலையிலும் நீங்க செம கிளாமரா இருக்கீங்க. இன்னும் இதே போல நிறைய போட்டோவை போஸ்ட் பண்ணுங்க என்று சில நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

ஒரே ஒரு ரிப்ளை
இதுதான் கில்லர் லுக்.. செமயா இருக்கு என்று சிலர் தெரிவித்துள்ளனர். ஒரு தமிழ் ரசிகர், அக்கா சூப்பரா இருக்கு என்று கூறியுள்ளார். பலர் அவரிடம் ஒரே ஒரு ரிப்ளை கொடுங்க என்று கேட்டுள்ளனர். சில நெட்டிசன்ஸ் அவர் அழகை அப்படி, இப்படி வர்ணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











