இரும்புத்திரை 2: நயன்தாரா அளவுக்கு வெயிட் காட்டப் போகும் தல பட நடிகை
சென்னை: இரும்புத்திரை 2 படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் கதாபாத்திரம் குறித்து தெரிய வந்துள்ளது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்த இரும்புத்திரை படம் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள்.

இரண்டாம் பாகத்தை புதுமுகம் ஆனந்த் இயக்குகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். முதல் பாகத்தை போன்றே இதிலும் விஷால் ராணுவ வீரராக வருகிறாராம்.
ஷ்ரத்தா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். டம்மி போலீஸ் இல்லை சண்டை எல்லாம் போடும் சூப்பர் போலீசாக நடிக்கிறாராம். ஷ்ரத்தாவுக்கு ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. நல்ல வெயிட்டான கதாபாத்திரம் தான்.
ஷ்ரத்தா முதன்முறையாக காக்கிச் சட்டை போடுகிறார். படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடந்து வருகிறது. சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











