ஷாக்கிங்.. பனிமலை இப்படி உடையுமா? உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு.. பிரபலங்கள் கருத்து #Uttarakhand

டேராடூன்: உத்தரகண்டில் பனிப் பாறைகள் உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில், சினிமா பிரபலங்கள் தங்களின் கருத்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துள்ளனர்.

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் உடைந்து ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு தேசத்தையே உலுக்கி உள்ளது. 150 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அம்மாநில முதல்வரே அச்சம் தெரிவித்துள்ளது மிகப்பெரிய தேசிய பேரிடராக மாறி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், தியா மிர்சா, தலர் மஹேந்தி உள்ளிட்ட பலர் தங்களின் ரியாக்‌ஷன்களை ட்வீட் செய்து வருகின்றனர்.

ரொம்ப கஷ்டமா இருக்கு

உத்தரகாண்டில் திடீரென பனிப் பாறைகள் உடைந்து இப்படியொரு பேரிடர் நடந்துள்ள சம்பவம் மனதை மிகவும் உலுக்குகிறது. இது மனதுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு என பிரபல பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காணாமல் போனவர்கள், உயிரோடு தப்பிக்கவும் இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.

வினீத் பிரார்த்தனை

அக்‌ஷய் குமாரின் கோல்டு, டாப்சியின் சாண்ட் கி ஆங்க் உள்ளிட்ட ஏகப்பட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் வினீத் குமார் சிங் உத்தரகண்ட்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளமாக வரும் வீடியோவை பதிவிட்டு, பிரார்த்தனைகள் என பதிவிட்டுள்ளார். ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களையும் அப்புறப்படுத்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

பாலங்களை கட்டியதாலே

இமாலய மலையில் ஏகப்பட்ட பாலங்களை கட்டியதாலே இதுபோன்ற பனிப்பாறைகள் உடைந்து விபத்துக்குள்ளாகி உள்ளன. இயற்கை வளங்களை அளிப்பதன் விளைவுகளை தான் நாம் சந்தித்து வருகிறோம் என பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், அவசர உதவி எண்களையும் பதிவிட்டுள்ளார். (1070 or 9557444486 for help.)

பிரார்த்தனைகள்

பிரார்த்தனைகள்

மேலும், ஏகப்பட்ட இந்திய பிரபலங்களும், ரசிகர்களும் பொது மக்களும் உத்தரகண்ட் மக்களுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். பனிப்பாறை வெடிப்பு நடக்க என்ன காரணம் என்றும், பனிப்பாறை விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் பேரிடர் படையினர், தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

அக்‌ஷய் குமார் ட்வீட்

பார்க்கவே ரொம்ப பயமா இருக்கு, பனிப்பாறைகள் வெடித்து சிதறும் ஒவ்வொரு காட்சிகளும் பயத்தை அதிகரிக்கிறது. அங்குள்ளவர்கள் பத்திரமாக இருக்க எனது பிரார்த்தனைகள் என பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார் உத்தரகாண்ட் சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

தமன்னா ட்வீட்

உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கால் பாதிப்படைந்த மக்களை சுற்றியே என் உள்ளம் செல்கிறது. சீக்கிரமே நிலைமை சரியாக வேண்டும் என்று நடிகை தமன்னா பதிவிட்டுள்ளார். அவசர கால உதவி எண் 1070 மற்றும் 9557444486 என்ற எண்ணையும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X