ஆண் நண்பருடன் நெருக்கமாக.. பைக்கில் ஊரை சுற்றிய பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், தனது ஆண் நண்பருடன் பைக்கில் ஊரை சுற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஆஷிக் 2, சாஹோ, பாகி 3 படங்களில் நடித்துள்ள நடிகை ஷ்ரத்தா கபூர், லாக்டவுன் தளர்வு காரணமாக காதலர் என கிசுகிசுக்கப்பட்டு வரும் பிரபல புகைப்படக் கலைஞருடன் பைக்கில் ஊர் சுற்றும் வீடியோ பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறது.

வில்லன் மகள்

வில்லன் மகள்

கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேல் நடித்த பிரபல பாலிவுட் வில்லன் சக்தி கபூரின் மகள் தான் ஷ்ரத்தா கபூர். பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் எளிதில் திரைத்துறைக்கு வருவது போல, கடந்த 2010ம் ஆண்டு டீன் பாட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஷ்ரத்தா.

டான்ஸர்

டான்ஸர்

2013ம் ஆண்டு வெளியான ஆஷிக் 2 படத்தில் பாடகியாக நடித்து இளைஞர்களின் மனங்களை வென்ற ஷ்ரத்தா கபூர், ஏபிசிடி, ஸ்ட்ரீட் டான்ஸர் படங்களில் நடிகர் வருண் தவான் மற்றும் பிரபுதேவாவுடன் இணைந்து அசத்தலாக நடனமாடி தான் ஒரு சிறந்த டான்ஸர் என்பதையும் நிரூபித்து உள்ளார்.

பிரபாஸ் ஜோடி

பிரபாஸ் ஜோடி

பாகுபலி படத்திற்கு பிறகு கடந்த 2018ம் ஆண்டு வெளியான பிரபாஸின் பிரம்மாண்ட பட்ஜெட் படமான சாஹோ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார் ஷ்ரத்தா கபூர். பாகுபலி அளவுக்கு அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூமர் காதலர்

வருண் தவான், டைகர் ஷெராஃப், பிரபாஸ் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் நடிகை ஷ்ரத்தா கபூர், பாலிவுட்டின் பிரபல புகைப்படக் கலைஞர் ரோகன் ஸ்ரேஷ்தாவை காதலித்து வருவதாக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பரவலாக பேசி வந்தனர்.

பைக்கில் நெருக்கமாக

பைக்கில் நெருக்கமாக

இந்நிலையில், மும்பையில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது ஆண் நண்பரான ரோகன் ஸ்ரேஷ்தாவுடன் நடிகை ஷ்ரத்தா கபூர், கருப்பு நிற டிசர்ட், டிராக் பேன்ட் மற்றும் மாஸ்க் அணிந்த படி மிகவும் நெருக்கமாக ஒட்டிக் கொண்டு செல்லும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிக்கக் கூடாது

நடிக்கக் கூடாது

பாலிவுட் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், நடிகை ஷ்ரத்தா கபூரின் தந்தையும் பிரபல வில்லன் நடிகருமான சக்தி கபூர், இப்போதைக்கு தனது மகளை எந்தவொரு ஷூட்டிங்குக்கும் அனுப்ப மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளதும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X